வேண்டுமென்றே செய்யவில்லை… இந்த போட்டியில் தோல்வியடைய காரணம் இதுதான் – ரோஹித் சர்மா விளக்கம்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் இன்று ஏற்கனவே ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணியானது இன்று மோதுகிறது. மேலும் ஆசிய கோப்பை 2023 தொடரில் ஏற்கனவே இந்தியா இறுதி போட்டிக்கு சென்று விட்டதினால் இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் வென்றி பெற்றாலும் எந்த விதமான பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்படாது.

இதனால் இந்திய அணியின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே தடுமாறினார்கள். ஆனாலும் பின்னர் சுதாரித்து கொண்ட பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் பொறுமையாக விளையாடி 85 பந்துகளில் 80 ரன்களை விளாசினார்.

இவரோடு டவ்ஹித் ஹ்ரிடோய் 81 பந்துகளில் 54 ரன்களை விலாச பின்னர் பந்து பேட்ஸ்மேன்கள் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை விளாசியது. ஆனால் இதனையடுத்து விளையாடிய இந்திய அணியால் 49.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியயை தழுவியது.

இதனையடுத்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சர்மா கூறுகையில் ” இந்த போட்டியில் மற்ற வீரர்களுக்கு விளையாட ஒரு வாய்ப்பினை வழங்க நினைத்தோம். அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. மற்றபடி இந்த போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

உலகக் கோப்பை தொடரில் விளையாடப் போகும் வீரர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதன் காரணமாகவே அணியில் பல மாற்றங்கள் இருந்தன. அக்சர் பட்டேல் மிக சிறப்பாக விளையாடினார் ஆனாலும் போட்டியை முடித்துக் கொடுக்க முடியாமல் போனது. அதே வேளையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். சுப்மன் கில் அருமையான சதத்தை அடித்து மீண்டும் தனது அட்டகாசமான ஃபார்மினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரால் எப்படி விளையாட முடியும் என்பதை இந்த தொடர் முழுவதுமே அவர் நிரூபித்துக் காட்டி உள்ளார். அதோடு கடந்த ஒரு வருடமாக அவரது ஆட்டம் புதுப்பந்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்காக அவர் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம் அவரிடம் இயல்பாகவே நல்ல ஆட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. இந்நிலையில் நாளை இந்திய அணியானது இலங்கை அணியுடன் ஆசிய கோப்பை 2023 இறுதி சுற்றில் மோதுவது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை