குறுக்க நாங்க வரலாமா.. மழையால் சொதப்பிய ஆட்டம் – 2 ரன்களில் தப்பிய இந்தியா – விபரம் இதோ.

இந்திய அணியானது சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அடித்தாக இந்தியா 3டி 20 போட்டிகள் கொண்ட அயலர்ந்து தொடரில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதினால் பும்ரா கேப்டனாகவ

By ·

இந்திய அணியானது சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அடித்தாக இந்தியா 3டி 20 போட்டிகள் கொண்ட அயலர்ந்து தொடரில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. ஆனால் இந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றதினால் பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் கைகுவாட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுளார்.

இந்நிலையில் இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு முதல் ஓவரிலேயே ஆண்டி பால்பரின் 4, லார்கன் டுக்கர் 0 என 2 முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா 327 நாட்கள் கழித்து விக்கெட்களை எடுத்து மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார். மேலும் பின்னர் வந்த ஹேரி டெக்டர் 9 (16) ரன்களிலும் மறுபுறம் தடுமாறிய கேப்டன் பால் ஸ்டர்லிங்கும் 11 (11) ரன்களில் ஆட்டமிழந்து அயர்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனையடையது வந்த ஜார்ஜ் டாக்ரெல் 1, மார்க் அடைர் 16 என ஆட்டமிழந்த நிலையில் 59/6 என சரிந்த அயர்லாந்து 100 ரன்களை தாண்டுமா என்று கவலை ஏற்பட்ட போது அற்புதமாக விளையாடிய குர்ட்டீஸ் கேம்பர் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 (33) ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் அவருடன் ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி கடைசியில் அதிரடி காட்டிய பேரி மெக்கார்த்தி 4 பவுண்டரி 4 சிக்சருடன் 51* (32) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் ஓரளவு தப்பிய அயர்லாந்து 20 ஓவர்களில் 139/7 ரன்கள் எடுக்க 140 ரன்களை எடுத்தாள வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் ருதுராஜுடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 24 (23) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த திலக் வர்மா கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

மறுபுறம் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கைக்வாட் 19 (16) ரன்களும் சஞ்சு சாம்சன் 1 (1) ரன்னிலும் விளையாடி கொண்டிருந்த போது மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியானது தடைபட இந்தியா 6.5 ஓவர்களில் 47/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓயாமல் தொடர்ந்து பெய்து மைதானத்தை தண்ணீரால் நிரப்பியது. அதனால் டக்வொர்த் லெவிஸ் விதிமுறையை படி போட்டியின் வெற்றியாளரை அமபயர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இடஙக முறைப்படி இந்தியா 2 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்றது. ஒருவேளை மழைக்கு பிறகு போட்டி நடந்திருக்குமாயின் பிட்ச் ஸ்லோவாக இருப்பதினால் கண்டிப்பாக இந்தியாவிற்கு அந்த போட்டி கடினமான ஒன்றாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறம் கேப்டனாக தலைமை தாங்கிய முதல் போட்டியிலேயே பும்ரா இந்தியாவுக்கு வெற்றி பதிவு செய்து 2 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பான கம்பேக் கொடுத்து, திரும்பி வந்துவிட்டேன் என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை