உலக கோப்பை 2023 இந்தியா பாஸ்கிதான் போட்டியில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் – வெளியான தகவல் இதோ.

உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் முதல் போட்டியானது அக்டோபர் 5

By ·

உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் முதல் போட்டியானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை தொடர்ந்து ஆக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை இந்தியா சென்னை மைத்தனத்தில் எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து 15ஆம் தேதி அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திரே மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா மோதல் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படி உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதவாது பாஸ்கிதான் vs இந்தியா போட்டியானது வரும் ஆக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்குகிறது. ஆனால் அன்றய நாள் இரவு தான் கர்பா நடனத்துடன் குஜராத் மக்கள் நாராத்திரியை கொண்டாட இருக்கின்றனர். இதில் தான் தற்போது புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் குஜராத்தின் இந்த மிகப்பெரிய திருவிழாவில் அதிகமான மக்கள் கூடுவார்கள். அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை இருக்கும்.

அதே நேரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை பார்ப்பது என்பது பல ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு கனவாக இருக்கும். அவர்கள் ஏற்கனவே அந்த நேரத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள தங்கள் பயணத்தையும் ஹோட்டலையும் முன்பதிவு செய்திருப்பார்கள். எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தை கவனமாகக் கையாள வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில் டிக்கெட்டுகள் இன்னும் சந்தையில் வெளிவரவில்லை. எனவே இடத்தை மாற்றுவதற்கு வாரியத்திற்கு உரிமை உண்டு.

குறிப்பாக பாதுகாப்பு நிறுவனம் அட்டவணையை மாற்றியமைக்கும்படி அவர்களிடம் கேட்டிருந்தது. இதனிடையே பிசிசிஐயின் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில் “எங்களிடம் உள்ள விருப்பங்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம், விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்தியா vs பாகிஸ்தான் போன்ற உயர்மட்ட விளையாட்டில் ஆயிரக்கணக்கார் ரசிகர்கள் வெளியே இருந்து அகமதாபாத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நவராத்திரி காரணமாக அவை தவிர்க்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு நிறுவனங்களால் எங்களிடம் கூறப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி. இருப்பினும் போட்டி நடைபெறும் இடத்தை வாரியம் மாற்றுவது மிகவும் சாதாரண காரியம் கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்பே இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து அதிர்ப்த்தி தெரிவித்திருந்தது. எனவே ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் மைதானத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பும் என்று கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை