இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா – வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா கூறியது என்ன?
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படு
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியானது இந்த தொடரின் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து கொண்டது.
குறிப்பாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு அசதியுள்ளது இந்தியா. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா.
இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மோசமாக விளையாடியது என்றே சொல்லலாம். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். இதனால் இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இந்த சுலபமான ஸ்கொரை எதிர்த்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறியது பின்வருமாறு.
ரோஹித் சர்மா கூறுகையில் “இந்த போட்டி உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது என்பதில் மகிழ்ச்சி. இது போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அதுவும் சவாலான மைதானத்தில் வெற்றி பெற்றது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. அனைத்து வகைகளுமே இந்த போட்டியில் நாங்கள் சவாலை எதிர்கொண்டோம். இது போன்ற மைதானத்தில் நாங்கள் நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சி.
ஹார்டிக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் மிகவும் உழைத்திருக்கிறார். ஒரே இரவில் இது போன்ற மாற்றம் வந்துவிடாது. அவர் வீசும் அனைத்து பந்துகளிலுமே விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார். இது போன்ற எளிய இலக்கினை சுருட்டுவது எளிதல்ல. ஆனாலும் அதனை எங்களது பந்துவீச்சாளர்கள் அதனை செய்துள்ளனர். குல்தீப் யாதவ் கடந்த ஓர் ஆண்டாகவே மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா x