மைதானம் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை – தோல்விக்கு பிறகு இலங்கை அணியின் கேப்டன் பேட்டி.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படு
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியானது இந்த தொடரின் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து கொண்டது.
குறிப்பாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு அசதியுள்ளது இந்தியா. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா.
இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மோசமாக விளையாடியது என்றே சொல்லலாம். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். இதனால் இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இந்த சுலபமான ஸ்கொரை எதிர்த்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டான் தசுன் ஷனகா கூறியது பின்வருமாறு.
இந்த போட்டியின் போது மைதானம் இப்படி இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. நாங்கள் இதனை ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. துனித் வெல்லாலகே இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர் அசத்தலாக செயல்பட்டார். அதேபோன்று தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் அசலங்கா ஆகியோரும் அருமையாக செயல்பட்டனர். வலைப்பயிற்சியில் எப்போதுமே அவர்கள் இருவருமே சிறப்பாக செயல்படுவார்கள்.
அந்த வகையில் இன்றைய போட்டியில் அவர்களது பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது.கடந்த போட்டியிலேயே வெல்லாலகே சிறப்பாக பந்துவீசி இருந்தார். அதனால் இன்று ஏதாவது ஸ்பெஷலாக செய்வார் என்று நான் கருதுகிறேன். அந்த வகையில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த போது அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை உணர்ந்தேன். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என தசுன் ஷனகா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.