“தாமதமாக ஆரம்பித்த IND vs WI டி20 3வது போட்டி” இதுல கூடவா அலட்சியமா இருப்பாங்க – என்ன நடந்தது வீடியோ இதோ
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இந்திய அணியானது இஷான் கிஷனுக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்தான் அவர்களுக்கு மைத்தனத்தில் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
அதாவது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 30 யார்டு தூரத்திற்கு பிட்சை சுற்றிலும் எல்லைக்கோடானது வரையப்பட்டிருக்கும். ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் போது இந்த உள்வட்டத்தில் தான் இதனை பேர் இருக்க வேண்டும் என்றும் பவர் பிளே முடிந்த பிறகு இதனை பேர் இருக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்படும். இதனால் இந்த உள்வட்டத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமான ஓன்று.
Match delayed due to the 30 yard circle not marked. pic.twitter.com/zaFxdjVqZI
— Vivek Pant (@ManasSingh45) August 8, 2023
ஆனால் அந்த உள்வட்டத்தில் தான் தற்போது பிரச்சனை ஏற்பட்டது. அதாவது மைத்தனத்தில் அந்த முக்கியமான 30 யார்டு வட்டமான வரையப்படவே இல்லை. இதனை போட்டி ஆரம்பித்த பின்னர் தான் அவர்களுக்கே தெரிய வந்தது. மேலும் இரு அணி வீரர்களும் மைத்தனத்தை விட்டு வெளியேறிய பின்னர் ஊழியர்கள் அந்த பிரச்னை சரி செய்தனர். இதனால் போட்டியானது கொஞ்ம் தாமதமாக ஆரம்பித்தது.
ஏற்கனவே இந்திய அணியின் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது சில சிக்கல்களை அனுபவித்தார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது முதல் ஒருநாள் போட்டியின் போது மைதானம் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு 1 மணிநேரம் தேவை பட்டதாகவும் அதற்கு அடுத்த போட்டியில் கலந்து கொள்ள பார்படாஸ் செல்லும் போது 6மணிநேரம் விமான நிலையத்தில் இருந்ததாகவும், இதனை புகார் செய்த போதிலும் சரியான நடவடிக்கை எடுப்பதில் மந்தமான நிலைமை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியான தகவல்களே.
மேலும் அஸ்வின் கூட தங்கள் பார்படாஸ் டெஸ்ட் சென்டரில் விளையாடிய போது அங்குள்ள வலைகளில் பயிற்சி செய்தபோது மேற்பரப்பில் புல் எதுவும் மிச்சமில்லை என்றும். மேலும் அவர்களின் வலைகள் மிகவும் பழையதாகத் தெரிந்தன என்றும் கூறினார். மேலும் தான் அவர்களைக் குறை கூறவோ அல்லது எதையுமே குற்றம் சாட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை எனவும் உண்மையில் அவர்களுக்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன். இப்படி இருந்தால் எப்படி வெஸ்ட் இண்டீஸ் சரியாக பயிற்சி எடுக்க முடியும் என்றும் விமர்சித்திருந்தார்.