அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்..அசால்டாக முடித்து விட்ட இந்தியா – அற்புதம் செய்த இளம் வீரர்கள்.

இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்ந

By ·

இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 17 (7) ரன்களையும் ப்ரண்டன் கிங் 18 (16) ரன்களிலும் ஆட்டமிழக்க. பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர நாயகன் நிக்கோலஸ் பூரான் 1 (3) கேப்டன் ரோவ்மன் போவல் 1 (3) ரன்களில் ஆட்டமிழந்தது அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால் 6வது ஓவரில் ஓவரிலேயே இலக்க ரன்களில் அவுட்டாக்கியதால் 57/4 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. குல்தீப் முக்கிய 2 விக்கெட்டுகளில் எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த சாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் சாய ஹோப் (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 61 (39) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.

கடந்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இடஙக இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

பின்னர் 77(47) ரன்களில் அதிரடி காட்டிய சுப்மன் கில் ஆட்டமிழந்தாலும் அதற்கு அவர் வெற்றிக்கு தேவையானதை செய்து விட்டார். இதனால் பின்னர் வந்த திலக் 7 ரன்கள் அடுத்த நிலையில் இந்தியா 17.1 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84(51) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அற்புதமாக விளையாடிய இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை , குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அறுத்தமாக செயல்பட்டனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை