வீடியோ : முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள்..இருந்த போதிலும் தடுமாறும் இந்தியா..காரணம் என்ன?

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவ்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரார்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் கிஷான் பொறுமையாகவே அட ஆரம்பித்தனர். ஆனால் சுப்மன் 7(9) ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 1(3) ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பியதினால் இந்திய அணிக்கு அழுத்தமானது கூடியது.

இதனையடுத்து இஷான் கிஷனுடன் கைகோர்த்து கொண்ட இந்திய திலக் வர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டாலும் இஷான் கிஷான் 27(23) ரன்களில் ஆட்டமிழந்தார், மேலும் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 7(7) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தனி ஆளாக திலக் வர்மா மட்டுமே அசத்தி கொண்டிருந்தார். அதோடு 50(39) பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார். இருந்த போதிலும் திலக் வர்மா 4 போர்கள் மற்றும் 1 சிக்ஸர் அடித்த நிலையில் 51(41) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நிலையாக நின்று ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 24(18) ரன்களில் ஆட்டமிழக்க ஆக்சர் படேல் 14(12) ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்படியொரு நிலையில் தான் இரண்டவது இன்னிங்கின் முதல் ஓவரிலேயே கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு அதிசயம் நடத்தினார்.

அதாவது ஏற்கனவே கடந்த போட்டியில் குறைவான ரன்களை அசால்டாக வெஸ்ட் இண்டீஸ் அடித்த நிலையில் இந்த போட்டியிலும் அப்படியே நடக்கும் என்றிருந்த நேரத்தில் தான் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே பிராண்டன் கிங் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதற்கு பிறகு 4 வது பந்தில் சார்லஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. இருந்த போதிலும் பின்னர் வந்த நிகோலஸ் பூரன் அதிரடி காட்டி அரை சதம் விளாசிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 11.3 ஓவர்களில் 103 ரன்களை அடித்து பலமாக இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை