மீண்டும் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் – வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சாதனை படைத்த இந்தியா.

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநா

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதனால் பலரும் இந்திய அணியின் இந்த பர்மிற்கு விமர்சனம் செய்தார்கள்.

இந்நிலையில் மூன்றவது டெஸ்ட் போட்டியானது பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று அவர்களுக்கு பின்னர் தான் தெரிய வந்தது. ஏனென்றால் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 43 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதனை தொடர்ந்து சுப்மன் கில்லலும் 50 பந்துகளில் அரை சதம் விளாசினார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 19 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக இஷான் கிஷான் 77(64) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ருதுராஜ் கைகுவாட் 8(14) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சுப்மன் கில்லுடன் கூட்டு சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட 39 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதற்கு அடுத்த படியாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சுப்மன் சதம் அடிக்காமலேயே 85 (95) ரன்களில் ஆட்டமிழந்தார், பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 35(30) ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 70(52) ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணியானது 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஸ்கோரே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து அவர்களது சொந்த மண்ணில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதனையடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக ப்ரண்டன் கிங் ஆட்டமிழந்தார், அதற்கு கையில் மேயர்ஸ் 4(10) ரன்களிலும், கேப்டன் ஷாய் ஹோப் 5(9) ரன்களிலும் ஆட்டமிழக்க அணியானது அப்படியே சரிந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக குடாகேஷ் மோடில் 39 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷரத்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், உனடிக்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்த தொடரின் நாயகனாக இஷான் கிஷனும், இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை