வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது போட்டியிலும் வெற்றி..இந்திய அணிக்கு என்னதான் ஆனது? கோபத்தில் ரசிகர்கள்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவ்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரார்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் கிஷான் பொறுமையாகவே அட ஆரம்பித்தனர். ஆனால் சுப்மன் 7(9) ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 1(3) ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பியதினால் இந்திய அணிக்கு அழுத்தமானது கூடியது.
இதனையடுத்து இஷான் கிஷனுடன் கைகோர்த்து கொண்ட இந்திய திலக் வர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டாலும் இஷான் கிஷான் 27(23) ரன்களில் ஆட்டமிழந்தார், மேலும் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 7(7) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தனி ஆளாக திலக் வர்மா மட்டுமே அசத்தி கொண்டிருந்தார். அதோடு 50(39) பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார். இருந்த போதிலும் திலக் வர்மா 4 போர்கள் மற்றும் 1 சிக்ஸர் அடித்த நிலையில் 51(41) ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிலையாக நின்று ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 24(18) ரன்களில் ஆட்டமிழக்க ஆக்சர் படேல் 14(12) ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது, அதற்கு பிறகு 4வது ஓவரில் ஆதிரடி வீரர் கையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தததால இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
Captain Hardik Pandya strikes twice in the first over 🔥
— OneCricket (@OneCricketApp) August 6, 2023
How spectacular was that catch from SKY 🔝😮#HardikPandya #WIvIND #CricketTwitter pic.twitter.com/caP4IoskP9
ஆனால் பின்னர் கைகோர்த்து கொண்ட நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மன் பவல் இருவரும் இணைந்து அற்புதமாக விளையாடி இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர். மேலும் நிகோலஸ் பூரன் 50(29) அரை சதம் விளாசினார். அதற்கு பின்னர் கேப்டன் ரோவ்மன் பவல் 21(19) ஆட்டமிழந்தார், மறுபுறம் கலக்கி கொண்டிருந்த பூரன் 67(40) ரன்களில் ஆட்டமிழந்தாலும் அது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற போதுமானதாக இருந்தது.
இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெரும் என்றிருந்த நேரத்தில் 16 வது ஓவரில் யூஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் மேஜிக் செய்து ஹோல்டர், ஷெப்பர்ட் என 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் ரன்கள் மிகவும் குறைவாக இருந்ததினால் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் வெறும் 18.5 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் டி20 தொடரில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. மறுபுறம் மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்களும் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.