மீண்டும் நங்கூரமாக நின்ற ஜெய்ஸ்வால் – ரோஹித்.. 500வது சாதனை போட்டியில் சாதனை நிகழ்த்த இருக்கும் விராட். இந்தியா முன்னிலை.
மேற்கிந்திய தீவுகள் தீவுகளுக்கு இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியானது சமீபத்தில் டொமேனிகாவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹ
மேற்கிந்திய தீவுகள் தீவுகளுக்கு இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியானது சமீபத்தில் டொமேனிகாவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி இருவரும் சதம் அடித்தனர். இதனால் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏனென்றால் முதல் போட்டியில் தவறுதலாக பேட்டிங்கை தேர்வு செய்து அடுத்துத்து விக்கெட்டுகளை இழந்து பெரும் தோல்வியை சந்தித்தது. இது ஏற்கனவே உலக கோப்பை குவாலிபயரில் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் ஒரு வறுத்தமான போட்டியாக இருந்தது.
இதனை கருத்தில் கொண்டுதான் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்நிலையில் கடந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் நேற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மீண்டும் களமிறங்கினர். இந்நிலையில் இருவரும் கடந்த போட்டியில் போலவே மிகவும் அற்புதமாக விளையாடி ரன்களை குவிந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போட்டியின் அழுத்தம் கூடியது. மேலும் ரோஹித் ஷர்மாவும் ஜெய்ஸ்வாலும் அரை சதத்தை மீண்டும் ஒரு முறை அடித்தனர்.
ஆனால் இடைவேளைக்கு பிறகுதான் இந்த கூட்டணி உடைந்தது. மீண்டும் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் ஜேசன் ஹோல்டரிடம் ஆட்டமிழக்க, அதற்கு பிறகு வந்த சுப்மன் கில் களமிறங்கினார். ஆனார் அவரும் கடந்த போட்டியில் போலவே வரும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு சில ஓவர்களிலேயே ரோஹித் ஷாமர்மாவும், அதற்கு பிற்காடு வந்த ரஹானேவும் ஆட்டமிழக்க 181 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
இதனையடுத்து டி பிரேக் வர கூட்டு சேர்ந்த விராட் மற்றும் ஜடேஜா ஜோடி அற்புதமாக விளையாடினார்கள். மேலும் விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் அரை சதமும் விளாச நாள் முடிவில் ஜடேஜா மற்றும் விராட் கோலி ஜோடி விக்கெட்டுகள் எதுவும் விடாமல் இந்தியாவை 288 ரன்களுக்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது 161 பத்துகளுக்கு 87 ரன்களை அடித்துள்ள விராட் கோலி தன்னுடைய 500வது சாதனை போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் குறிப்பிடதக்க வகையில் இந்த போட்டியானது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கிரிக்கெட் வரலாற்றில் நடக்கும் 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா நினைவு பரிசை வழங்கினார்.