வீடியோ : போட்டியின் நடுவே ஏற்பட்ட தகராறு.. தரமான சம்பவம் செய்த இந்தியா A வீரரகள்.
நேற்று வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டியானது நடந்தது. இந்த போட்டியில் இந்திய ஏ அணி பகங்ளாதேஷ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியாது பந்துவீச்சை தேர்வு செய்தது. சமீப ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப
நேற்று வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டியானது நடந்தது. இந்த போட்டியில் இந்திய ஏ அணி பகங்ளாதேஷ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியாது பந்துவீச்சை தேர்வு செய்தது. சமீப ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா A அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும் 24 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதற்கு பிறகு வந்த அதிரடியாக விளையாடும் அபிஷேக் ஷர்மா அதிக பந்துகள் நீடித்தாலும் அவரும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 34 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த CSK அணியின் நிஷாந்த் சிந்து 5 ரன்களிலும் ரியான் பராக் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, துருல் ஜூரல் 1 ரன்னிலும், ஹங்கர்கேகர் 15 ரங்களிலும் மனோவ் சதர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணிக்கு அழுத்தம் கூடியது.
இந்நிலையில் இப்படி இந்தியாவிற்கு தொடர்ந்து விக்கெட்டுகள் விழும் போது பங்களாதேஷ் அணியின் வீரர்கள் கொண்டாடிய விதம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரியான் பராக் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும் போது கூட வாங்கதேச அணியின் தன்சின் ஹசன் சாகிப் மோசமாக நடந்து கொண்டதாகவும் ஆனாலும் இந்தியாவின் வீரர்கள் பொறுமை காத்ததாகவும் கூறப்படுகிறது.
India vs Bangladesh – never short of some heat 🔥
— FanCode (@FanCode) July 21, 2023
.
.#EmergingAsiaCup2023 #INDAvBANA pic.twitter.com/xxnMx8Arez
இப்படிப்பட்ட நிலையில் வங்கதேசம் விளையாட வந்து ரன்களை மளமள வென குவிக்க தொடங்கியது. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்து விட்டது என்றிருந்த நிலையில் 2வது விக்கெட்டில் இருந்து வங்கதேச ஏ அணியின் வீழ்ச்சி தொடங்கியது. இதனால் இந்தியாவும் தாங்கள் அமைதியாக வாங்கிக்கொண்டதை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. அனிலயில் தான் 26வது ஓவரை யுவராஜ் சிங் டோடியா வீசினார். அ
தில் சௌமியா சர்க்கார் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டின் வெற்றியை கொண்டாட கூறிய போது பேட்மேனுக்கும் இந்திய அணியின் வீரர் ராணாவிற்கு இடையே சில வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தடுக்க அம்பயரும், தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முயன்றனர். பின்னர் இருவரும் விலகி சென்றனர். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த போட்டியில் இந்திய அணியானது அற்புதமான விளையாட்டை விளையாடியது. கிட்டத்தட்ட தோல்வியடையும் நிலையில் இருந்து பின்னர் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. மேலும் நிஷாந்த் சிந்து அற்புதமான பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.