பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த தமிழ்நாட்டு வீரர் – பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இந்தியா A அபார வெற்றி.

வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா

By ·

வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா 2வது லீக் போட்டியில் நேபாளை எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் அபாரமாக விளையாடிய இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் குரூப் ஏவிலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியும், குரூப் பி யில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று பாகிஸ்தான் vs இந்தியாவின் கடைசி குரூப் போட்டியானது நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாஸ்கிதான் ஏ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இந்த போட்டியில் இந்தியா அணிக்கு கேப்டனாக யாஷ் துல்லும் பாஸ்கிதான் அணிக்கு கேப்டனாக முகமது ஹாரிஸிம் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைத்து ஏனென்றால் தொடக்க வீரரான சமி ஆய்யூப் இந்திய அணியின் வீரர் ராஜ்வரதன் ஹங்க ரேக்கரிடம் ஆட்டமிழந்தார். பின்னர் அவர் தொடர்ந்து அதே ஓவரிலேயே உமர் யூசப் விக்கெடுத்தியும் வீழ்த்தி ராஜ்வரதன் ஹங்க ரேக்கர் கலக்கினார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடையில் வென்ற சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கலக்கிய ராஜ்வரதன் ஹங்க ரேக்கர் :

பின்னர் பாஸ்கிஸ்தான் அணியின் பிரான் விக்கெட்டை கட்டுப்படுத்த முயன்றாலும் வரும் 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேலும் பல் விக்கெட்டுகள் விழுக பாஸ்கிதான் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்த போதிலும் காசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்கு ரன்களை குவிக்க மறுபுறம் மெக்ரான் கான் மற்றும் முபாசிர் கான் இருவரும் அவருக்கு துணையாக விளையாட பாஸ்கிதான் 48 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதில் ராஜ்வரதன் ஹங்க ரேக்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா பேட்டிங் :

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியானது மிகச்சிறப்பாக விளையாடியது. சொலல்ப்போனால் முதல் விக்கெட்டே 58 ரன்களுக்கு பிறகுதான் விழுந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் இடஙக போட்டியிலும் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேலும் இவருடன் கைகோர்த்த நிக்கின் ஜோஸும் அரை சதம் விளாச இரண்டாவது விக்கெட்டானது 157ரன்களின் போதுதான் விழுந்தது.

இந்த போட்டியில் இதற்கு பிறகு இந்தியா சில தவறுகளை செய்தாலும் பாகிஸ்தானுக்கு தேவையான நேரம் கடந்து விட்டது. மேலும் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 110 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சனுக்கும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து கலக்கிய ராஜ்வரதன் ஹங்க ரேக்கருக்கும் பாராட்டுகள் குவிந்த வன்மாக இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை