“சதமடித்த பாஸ்கிதான் A வீரர்” அழுத்தத்தில் ஆட்டமிழந்த இந்தியவீரர்கள் – கோப்பையை வென்றது பாகிஸ்தான் A.

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்

By ·

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 352 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த சாய்ம் ஆயுப் 59 ரன்களும் பஃர்கான் 65 ரன்களையும் அதிரடியாக அசத்தினார்கள். இவர்களுக்கு பின் களமிறங்கிய பாஸ்கிதான் வீரர்கள் இந்திய பவுலர்களை பறக்க விட்டனர். மேலும் பாஸ்கிதான் அணியில் தாயப் தாஹிர் 45 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 12 பவுண்டரி 4 சிக்ஸருடன் 108 ரன்கள் விளாசினார்.

இதனால் பாஸ்கிதா அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை விளாசியது. அதைத்தொடர்ந்து 353 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை அடித்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமிதா நிலையில் அர்சத் இக்பால் வீசிய பந்தில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் இவர்களின் பாட்னர்ஷிப் உடைய இங்கே தான் பெரிய பிரச்சனையே பிறந்தது. ஏனென்றால் அங்கிருந்துதான் இந்தியாவின் வீழ்த்தி தொடங்கியது. எப்போதும் போல அற்புதமாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 51 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் கேப்டன் கேப்டன் 39 ரன்கள் அடித்து விழுகினர் விக்கெட்டுகளை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

இருந்த போதிலும் அபிஷேக் ஷர்மா 61 ரன்கள் ஆடி ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய A அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாஸ்கிதான் அணியானது 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியானது இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை