நேபால் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்த பௌலர்கள்.. அதிரடி காட்டிய சுதர்சன் – இந்தியா ஏ அணி அபார வெற்றி.

வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா

By ·

வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த அணியில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா 2வது லீக் போட்டியில் நேபாளை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் முதலில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது ஆனால் அது தவறான முடிவு என்று பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது

இந்நிலையில் முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்த வந்த நேபாள் அணியானது 37 ரங்களுக்கே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருந்த போதிலும் கேப்டன் ரோஹித் பௌடேல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து 7 பவுண்டரியுடன் 85 பந்துகளை 65 ரன்களை குவித்தார். மேலும் இவரோடு குல்சன் ஜா அதிரடியாக ஆடி 30 பந்துகள் 38 ரன்களை எடுத்தனர்.

இதனால் நேபாள் அணியானது 39.2 ஓவரிலேயே அணைத்து விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்த முதல் இன்னிங்கில் இந்திய அணியில் நிசாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டனர். இருந்த போதிலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் இந்த போட்டியில் இவர்கள் இருவரும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி நேபால் ஆனால் 167 ரங்களுக்குள் அடக்கினார். இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணிக்கு இது மியாகவும் சுலபமான ஒரு இலக்காக இருந்தது. இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர்.

View this post on Instagram

A post shared by Team India (@indiancricketteam)

இதில் ஒருபுறம் சாய் சுதர்சன் சற்று நிதானமாக விளையாட மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரை சதம் அடித்தார். இவர்கள் இருவரும் சிறப்பான பட்னர்ஷிப்பை கொடுத்த நிலையில் அபிஷேக் சர்மா 12 பவுண்டரி 2 சிக்சருடன் 69 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த நிலையில் நேபால் கேப்டன் ரோகித் பௌடேல் பந்தில் ஆட்டமிழந்தார். இருந்த போதும் தான் சேயாய் வேண்டியதை சரியாக செய்து முடித்தார் அபிஷேக் ஷர்மா.

பின்னர் வந்த துருவ் ஜுரல் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 21 ரன்கள் எடுக்க சாய் சுதர்சனும் அரை சதம் விளாசிய நிலையில் இண்டியாய் அணியானது 22.1 ஓவரிலேயே 172 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது. அடுத்த போட்டி வரும் ஜூலை 19ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை