இந்திய அணி பலமான அணி தான் ஆனால் நியூசிலாந்து அணியில் அந்த வீரர் இருக்கின்றார் – நாசீர் ஹுசைன்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் இன்று இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டியலு

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருகின்றது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில் அடுத்த கட்டங்களாக அரை இறுதி போட்டிகள் இன்று இருந்து நடைபெற உள்ளது. இந்திய அணி புள்ளி பட்டியலுக்கு முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தில் இருந்து வருகிறது.

இறுதிப்போட்டியில் முதல் போட்டியில் நாளை இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் உள்ள மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை போட்டிகள் சிறப்பாகவே அமைந்தது. இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளிலும் இந்திய அணி ஒன்பது போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி என்றால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கும் ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியா அணியை வீழ்த்தி இருகின்றது.

ஆகையால் இந்த முறையில் நியூசிலாந்து அணி என்பதால் இந்திய ரசிகர்களுக்கு அச்சமாக தான் இருகின்றது. உலகக் கோப்பையின் இந்த வருட உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி பந்துவீச்சாளர்களும் வெற்றிக்கு சிறந்த உழைப்பு அளித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த உலகக்கோப்பை போட்டியில் முகமது சமி 5போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 153 ரன்களை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். இதற்க்கு முன்னதாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்த போட்டியானது இந்தியாவில் நடைபெற்றதால் அது இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமைந்தது.

இந்த உலகக் கோப்பை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரம்பத்தில் சில காயங்கள் ஏற்பட்டு சில போட்டிகளை அவர் விளையாடாமல் இருந்தார். இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், இரண்டு அணிகளும் அற்புதமான அணிகள்தான். இதில் பேவரைட் அணி என்றால் அது இந்திய அணி தான். இந்த உலக கோப்பையில் எந்த அணியிடமும் இந்திய அணி தோல்வியை தழுவாமல் இருந்து வருகிறது.

அதேபோல் இந்திய அணியிடம் அடிப்படியாத ஒரே அணி என்றால் அது நியூசிலாந்து அணி தான். அவர்களிடம் சில வீரர்கள் அற்புதமான கடினமான விளையாட்டு விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு இரச்சன் ரவீந்தரா அணியில் பலமாக இருக்கின்றார். நான் இன்று மற்றும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் பொழுது மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு அங்கு ஏற்படும் என்று அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை