இந்திய அணியின் இந்த நிலைமைக்கு காரணம் அந்த முதல் நான்கு மணிநேரம் தான் – ரிக்கி பாண்டிங்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2023 இன் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இதுவரை அந்த அணியின் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஸ்மித் 121 ரன்கள் எடுத்தார், அதேசமயம் ஹெட்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2023 இன் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இதுவரை அந்த அணியின் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஸ்மித் 121 ரன்கள் எடுத்தார், அதேசமயம் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.
இந்நிலையில் இதற்கு பிறகு முதல் இன்னிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலே சொதப்பியது. அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 26 பந்துகளில் 15 ரன்களிலும் அவரை தொடர்ந்து சுப்மன் கில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் புஜாரா 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க, விராட் கோலி அட்டமிழந்து நம்பிக்கையை உடைத்தார். இருந்த போதிலும் ஜடேஜா அற்புதமாக ஆடினாலும் அவரும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக ரஹானே விளையாடி கொண்டிருக்கிறார். ரஹானே ஏற்கனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. இருந்த போதிலும் இந்த அழுத்தமான சூழ்நிலையில் அவர் எப்படி தாக்குப்பிடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தான் நேற்றைய போட்டியின் போது முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் இந்தியாவின் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் கூறியது :
அவர் கூறுகையில் “நேற்று அந்த முதல் நான்கு ஓவர்களிலும் குறுகிய பந்துகளினாலும் தான் தன்னை தானே இந்திய அணி தாழ்த்தி கொண்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த வகையான விக்கெட் சூழ்நிலையிலும் புத்தம் புதிய டியூக்ஸ் பந்து இருக்கும் போதும் அவர்கள் புல்லர் லெந் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும். இந்தியாவிற்கு மதியதற்குள் நான்கு அல்லது இந்தாளு விக்கெட்டுகள் தேவைபட்டது. ஆனால் அவர்களால் இரண்டு மட்டுமே வீழ்த்த முடிந்தது.
இது இந்தியாவிற்கு பாதகமாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக சென்றது என்றார் ரிக்கி பாண்டிங். மேலும் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் குறித்து பேசிய அவர் “எனக்கு தெரியும் ஒரு கேப்டன் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார். ஆனால் இது அவருடைய முடிவு மட்டுமே கிடையாது. ஏனென்றால் ராகுல் ட்ராவிட் மற்றும் ரோஹித் ஷர்மா போட்டியின் இடையே நேற்று (7ஆம் தேதி) நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன்.
அவர்கள் டாஸ் வென்றால் என்னால் செய்வது என்று பேசினார்கள். இந்தியாவிடம் நன்கு சீமார்கள் இருப்பதினால் பந்துவீச முடிவு செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு பலன் கிடைத்தது போல இல்லை என்று நினைக்கிறன், இருந்த போதிலும் இன்னமும் அதிக தூரம் செல்ல வேண்டியது இருக்கிறது, இதனால் அவர்களுடைய முடிவை தற்போதே கணித்து விட முடியாது என்று கூறினார் ரிக்கி பாண்டிங்.