ஒரே மாதத்தில் இத்தனை போட்டிகளா? வெளியானது இந்தியா vs அயர்லாந்து போட்டிகளுக்கான அட்டவணை.
சமீபத்தில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்து முடிந்த நிலையில் அதில் படு தோல்வியை சந்தித்த இந்தியா மனம் தளராமல் அடுத்ததாக இந்தியா வேஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட ஜூலை 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கி
சமீபத்தில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்து முடிந்த நிலையில் அதில் படு தோல்வியை சந்தித்த இந்தியா மனம் தளராமல் அடுத்ததாக இந்தியா வேஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட ஜூலை 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது. மேலும் அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் என பல பல தொடர் கொண்ட போட்டிகளை விளையாட இருக்கிறது.
ஏற்க்கனவே இந்த போட்டியானது உலகக்கோப்பைக்கு முன்பாக நல்ல பயிற்சியாக இந்தியாவிற்கு இருக்கும் என்ற நிலையில், தற்போது அந்த மாதத்தில் மீண்டும் ஒரு தொடாரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் 18 , 20 , 23ஆம் தேதிகளில் இந்தியா 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதக்குமுன்னர் நடந்த போட்டியில் இந்தியா 2-0 என்ற வெற்றிகாணக்கில் இருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இந்த போட்டிகள் குறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கான அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அயர்லாந்து அணி கூறியதாவது “கடந்த 12 மாதங்களின் இந்திய அணி இரண்டாவது முறையாக அயர்லாந்திற்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியின் தொடர்ந்து போட்டிகளில் விளையாடிவரும் இந்த இறுக்கமான தருணத்தில் அயர்லந்தில் டி20 போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த முறை இந்திய அணி அயர்லாந்து வரும் போது இங்கே இரண்டு டி20 போட்டிகளை விளையாடியது. அந்த இரண்டு போட்டிகளுக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்த்து. இதனால் இந்த முறை மூன்று போட்டிகளை நடத்த இருக்கிறோம். இந்த தொடரும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத படி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்கள்
கடந்த முறை இந்திய அணி அயர்லாந்து சென்ற போது ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்தினார். எனவே இந்த முறையும் ஹர்திக் பாண்டிய பெரிய இளம் வீரர்களை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரோஹித், கோலி போன்ற பெரிய வீரர்கள் இந்த போட்டியில் பங்குபெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரின் மூலம் சமீபத்தில் காயம் காரணமாக ஓய்வு எடுத்துவந்த பும்ரா மீண்டும் இணைத்து அவரது விளையாட்டை சோதிப்பர் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த போட்டிக்கும் பிறகு ஆசிய கோப்பை தொடரானது ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எனவே ஜூன் முதல் உலகக்கோப்பை வரையில் இந்திய அணி மிகவும் பிசியாக இருக்கிறது.