இந்தியா அவரை அதிகமாக மிஸ் செய்கிறது – பும்ராவின் முக்கியத்துவம் குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் ஓபன் டாக்.

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க பந்து வீச்சாளராகக் கருதப்படும் பம்ரா கடந்த 2022 செப்டம்பர் முதல் அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இதன் விளைவாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பிற பெரி

By ·

கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் மிக மதிப்புமிக்க பந்து வீச்சாளராகக் கருதப்படும் பம்ரா கடந்த 2022 செப்டம்பர் முதல் அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இதன் விளைவாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பிற பெரிய மோதல்களின் போதும் டி20 உலகக் கோப்பையில் அவர் இல்லாததால் இந்தியா அவரின் வெற்றிடத்தை நன்றாகவே உணர்ந்தது.

பும்ரா இந்திய அணியில் இல்லாத நிலையில் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் பும்ராவின் இடத்தை இட்டுக்காட்ட வாய்ப்பு இருப்பதாக விவாதங்கள் எழுகின்றனர். பும்ராவை பொறுத்தவரையில் அவர் மெதுவாக குணமடைந்து வருகிறார் என்றும் அயர்லாந்திற்கு எதிரான தொடரில் பங்கு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே பும்ரா பற்றி தன்னுடைய கருத்துகளை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் “கடந்த ஓன்று அல்லது ஒன்றரை வருடங்களாக பார்க்கும் போது பும்ராவை இந்தியா அதிகமாக மிஸ் செய்கிறது. இப்போதைக்கு, யார் வெள்ளை பந்தை விளையாடுவார்கள், யார் சிவப்பு பந்தை விளையாடுவார்கள் என்பது குறித்து எந்த விவாதங்களும் இல்லை.

பணிச்சுமையை சமாளிப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் அடுத்து விளையாடும் போட்டிகளை பார்க்கும் போது பணிச்சுமை மேலாண்மை முக்கியமானதாக என்பது இங்கு மிகவும் முக்கியம். இது தொடர்பாக இந்திய கேப்டனும் நிர்வாகவும் கலந்துரையாடி வருகிறது என்றார்.

மேலும் முகேஷ் பற்றி பேசிய அவர் கூறுகையில் “முகேஷுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது வாய்ப்பு என்று நினைக்கிறேன். அவர் கடந்த ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய பலம் என்ன என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதோடு இதன் மூலம் இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் பென்ச் வலிமையை அதிகரிக்க முடியும். நம்மிடம் சிராஜ் இருக்கிறார். ஆவர் மிகவும் சிறப்பாக பந்துகளை வீசுகிறார். மேலும் நம்மிடம் ஷமி மற்றும் பும்ரா இருக்கின்றனர்.

இருந்த போதிலும் நாம் பென்ச் மார்க்கை தாண்டி செல்ல வேண்டும். இது முகேஷுக்கு தன்னுடைய மூத்த வீரர்களுடன் கலந்துரையாடி வர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இது சரியான ஒரு வாய்ப்ப என்றார். மேலும் முன்னோக்கிச் செயல் வேண்டும் என்றால் தனிப்பட்ட பந்து வீச்சாளர்களுக்கு இடைவெளி கொடுக்க வேண்டும். ஒரு பந்து வீச்சாளருக்கு நாம் இடைவெளி கொடுக்கும் தருணம், இன்னொன்றை நாம் கொண்டு வர முடியும், இது பெஞ்ச் வலிமையை உருவாக்கும் என்றார் பராஸ் மம்ப்ரே

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை