வீடியோ : இந்தியாவிற்கு எதிராக அதிரடி காட்டிய நேபாள வீரர்களுக்கு விராட், டிராவிட், ஹர்திக் பாண்டியா விருது வழங்கி பாராட்டு.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது கடந்த 2ஆம் தேதி நடந்தது.
அந்த போட்டி மழை காரணமாக இரண்டாவது இன்னிங் தடைபட்ட நிலையில் இந்தியா நேற்று நேபாளம் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் நேபாளம் அணி 8.2 ஓவரில் போராடி 230 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து சேசிங்கை இந்தியா துவங்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதை துரத்திய இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களும் சுப்மன் கில் 67 ரன்களும் அதிரடியாக எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக டாஸை இழந்த நேபாள அணியானது முதலாவதாக பேட்டிங் செய்த்தினால் இந்தியாவின் பந்து வீச்சுக்கு 20 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்திய ஃபீல்டர்கள் கோட்டை விட்ட கேட்ச்களை பயன்படுத்தி 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நேபாள் 49 ஓவர்கள் வரை போராடி 230 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது.
அந்த வகையில் கிரிக்கெட்டில் சுமாரான அணி என்று கூறப்படும் அணியாக இருந்தாலும் டாப் அணியான இந்தியாவுக்கு சவாலை கொடுத்த அந்த அணியை இந்திய ரசிகர்களை சமூக வலைதளங்களில் பாராட்டினர். அதைத்தொடர்ந்து போட்டியின் முடிவில் தங்களுடைய ரோல் மாடல்களாக கருதப்படும் விராட் கோலி, ரோஹித் சர்மா அவர்களுடன் நேபாள் வீரர்கள் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டனர்.
भारतीय खेलाडीहरुले नेपाली खेलाडीहरुलाई दिएको सम्मान 🙏❤️❤️❤️❤️ pic.twitter.com/aiCm8zxTJo
— Bipin Sapkota (@bipinsapkota213) September 5, 2023
அதுமட்டுமல்லாமல் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய முகமது ஷமிக்கு கேக் வெட்டிய போது நேபாள் வீரர்களையும் இந்திய அணியினர் அழைத்தனர். இறுதியில் இந்திய அணியினரை தங்களுடைய அணியின் உடைமாற்றம் அறைக்கு அழைத்த நேபாள் பயிற்சியாளர் இப்போட்டியில் அசத்திய டாப் 3 வீரர்களுக்கு 3 சிறப்பு விருதுகளை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கையை ஏற்ற ஹர்திக் பாண்டியாஆல் ரவுண்டர் சம்பல் கமிக்கு மெடலை கொடுத்தார்.
அதே போல 58 ரன்கள் எடுத்த ஆசிப் சேக்கிற்கு இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியும். மேலும் ஃபீல்டிங்கில் அசத்திய திப்பெந்திராவுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருது வழங்கினார். இப்படி வளர்ந்து வரும் நேபாள அணியின் வீரர்களும் விருதுகளை கொடுத்தது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அது தொடர்பான வீடியோ பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.