வீடியோ : என்னப்பா நடக்குது இங்க? கிரிக்கெட் விளையாட சொன்ன ஃபுட்பால் விளையாடுறீங்க?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

இருந்த போதிலும் உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடந்தாலும் ஐபிஎல் போட்டியின் காரணமாக இங்குள்ள மைத்தனங்களின் தன்மை குறித்தும் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எப்படி இந்தியாவில் பந்துவீசுவார்கள் என்பது குறித்தும் நன்கும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனால் இந்த வருட உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 2023 உலகக்கோப்பை அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் பேட்டிங் துறையில் சுப்மன் கில், விராட் கோலி, இஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷார்துல் தாகூருடன் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர். அத்துடன் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய போட்டியில் பாகிஸ்தான் அணியை மூன்று முறிய எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போலவே முதல் முறை இருவருக்கும் நடந்த போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டு இருவரும் 1 பாயிண்ட் கொடுக்கப்பட்ட நிலையில் சூப்பர் 4 போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் 10 ஆம் தேதி மோதுகிறது.

View this post on Instagram

A post shared by Team India (@indiancricketteam)

இப்படிப்பட்ட பரபரமான சூழ்நிலைக்கு மத்தியில் தான் இந்திய அணியின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளத. அந்த வீடியோவில் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் வீரர்களும் வரும் வலையில் கால்பந்து விளையாடினார்கள். அப்படி அவர்கள் விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். இது ஒரு நல்ல அறிகுறி ஏனென்றால் வரும் பெரிய போட்டிகளுக்கு முன்னதாக மனதையும் கொஞ்சம் தளர்வாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதினால் இப்படி விளையாடுவதில் தவறு இல்லை என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை