கோலியை வைத்து பாபர் அசாமை விமர்சித்த இந்திய ரசிகர்கள். கடுப்பான பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்.

பாபர் அசாம் கோலியின் குழந்தை என போஸ்டர் வைத்து இருந்த இந்திய ரசிகர்கள். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

By ·

பாபர் அசாம் கோலியின் குழந்தை என போஸ்டர் வைத்து இருந்த இந்திய ரசிகர்கள். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு சரிதானா என்ற கேள்வியும் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 367 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களையும் குவித்து அணிக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்தனர். அதன் பின் வந்த அனைவரும் சொதப்பிய நிலையில் வெளியேறினர். ஸ்டோனிஸ் 21 ரன்களை அடித்திருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர் 1 விக்கெட்டு வீழ்த்தி இருந்தார்.

368 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான்அணிக்கு ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் கிடைத்து இருந்தாலும் அதன் பின் யாரும் அந்த தொடக்கத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக இம்ரான் உல் ஹக் 70 ரன்னிலும், அப்துல்லா ஷபீக் 64 ரன்களையும், ரிஸ்வான் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வூட் மற்றும் ஸ்ட்ராக் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தனர். ஆஸ்திரேலியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் அதன் பின் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை கண்டு சாம்பியன் அணி என்று நிரூபித்து வருகிறது.

கடுப்பான பத்திரிக்கையாளர் :

போட்டிக்கு இடையில் சில இந்திய ரசிகர்கள் பாபர் அசாமை விமர்சிக்கும் வகையில் ஒரு போஸ்டர் ஒன்றை மைதானத்தில் கையில் வைத்து இருந்தனர். அதில் கோலியின் மடியில் பாபர் அசாம் படுத்து கொண்டு இருப்பது போலவும் அதில் விராட் கோலி அப்பா எனவும் பாபர் அசாம் குழந்தை எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. நேற்றைய போட்டியில்பாபர் அசாம் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

இந்த சம்பவம் கிரிக்கெட் போட்டிகளின் தனித்துவமான மற்றும் அடிக்கடி தீவிரமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் வரும்போது. இந்த போட்டியின் வரலாற்று, கலாச்சார மற்றும் அரசியல் அடித்தளங்கள் இந்த இரு அணிகளுக்கிடையேயான ஒவ்வொரு போட்டியையும் உணர்வுபூர்வமான நிகழ்வாக ஆக்குகின்றன. இந்த நிகழ்விற்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அவரது கன்னடனதையும் தெரிவித்து இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை