ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து அணி. கலக்கும் இந்திய அணி பௌலர்கள்.
ஆரம்பத்திலே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூஸ்லாந்து அணி. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசா
ஆரம்பத்திலே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூஸ்லாந்து அணி. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலக கோப்பை போட்டியாகும்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வெச்ச தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்ய இருக்கின்றது. மேலும் இந்திய அணிகள் சார்பில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முகமது சாமி அணியில் இணைந்துள்ளார்.
டாஸ் குறித்து கேப்டன்கள் பேசியது
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் கூறுகையில் முதலில் பந்து விசுவதற்காக எந்த ஒரு காரணமும் கிடையாது நேற்று நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது இரவில் பணி வந்தது. இதன் காரணமாகவே நாங்கள் பந்து வீச்சை தேர்வு செய்தோம் என்று அவர் கூறியிருந்தார் . தற்போதைய வேகத்தை தொடர்வது மிக முக்கியமானது. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த காலங்களில் போட்டிகளில் நடந்ததை மறந்து விடுங்கள்.
எப்போதும் நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். கேப்டன் நியூசிலாந்து கேப்டன் லாதம் கூறும்போது நாங்களும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பௌலிங் தான் தேர்வு செய்து தரப்படும். இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வரும் என்பதால் நாங்கள் அதே விரும்பினோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
நியூசிலாந்து அணி எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் இந்த போட்டியில் விளையாடுகிறது. ஆனால் இப் போட்டியில் முதல் அடியாகவே நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டம் இருந்து வெளியேறினார். கான்வே 9 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஸஸ்ரேயஸ் ஐயரிடம் விக்கெட்டை இழந்து வெளியேற 17 ரன்கள் இருந்த நிலையில் யங் ஷமியிடம் போல்ட் ஆகி வெளியேறினார். ஆரம்பமே இங்கிலாந்து நியூசிலாந்து அணிக்கு பெரும் சோதனை ஆக இருந்து வருகிறது.