நான் வீரர்களிடம் இதை தான் செய்ய சொன்னேன். வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்

By ·

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் இருந்த உலகக் கோப்பை பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் களம் இறங்கி விளையாடினார்.

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக சூரியகுமார் யாதவர் தான் செயல்பட்டு வந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்த நிலையில் 200 ரண்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆதிக்கத்தால் இந்திய அணியால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.

இந்திய அணி அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும் ஜெயஸ்வால் 37 ரன்களுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்32 ரன்களுக்கு மட்டும் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிருந்து வெளியே அனுப்பி ஏமாற்றத்தை அளித்தார். உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. எனவே இந்தியா 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

175 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்களுக்கு சற்று பயத்தை தந்தது. இருப்பினும் இந்திய அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக வேட் 36 ரன்களுக்கும் ஹெட் 31 ரன்களும் ஷார்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை இருந்தனர் எனவே இந்திய 20 ரன்களுக்கு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,

டாஸ் தவிர மற்ற அனைத்தும் நம் வழியில் சென்றன. வெற்றி பெரும் ஊக்கமாக இருந்தது, குறிப்பாக வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. எல்லோரும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்களை வெளிப்படுத்தினர், அதைத்தான் நான் அவர்களிடம் சொன்னேன்: பயப்படாமல் இருங்கள், உங்கள் விளையாட்டை விளையாடுங்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஸ்டம்ப்களில் யார்க்கர்களை வீசுவது என்ற திட்டம் மிகத் தெளிவாக இருந்தது, அதை அங்கிருந்து எடுத்துச் செல்வோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை