இந்திய அணி இவ்வாறு செய்து இருக்க கூடாது. இது வெக்ககேடான செயல் – ஏபி டிவில்லியர்ஸ்.
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அதில் இருந்து மீண்டு வர இந்திய முழு முயற்ச்சியில்
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அதில் இருந்து மீண்டு வர இந்திய முழு முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அணி அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது.
அதற்க்கு முன்னேட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. 5 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும் 1 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் இந்தியா அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது.
குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதற்க்கு அடுத்த கட்டமாக இந்திய அணி தென்னாபிரிக்கா அணியிடம் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்க்கான இந்திய வீரர்களின் பட்டியலை BCCI நேற்று அறிவித்து இருந்தது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
இது குறித்து பேசிய டிவில்லியர்ஸ் கூறுகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இது ஏமாற்றத்தை அளிக்கின்றது. இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிறைய டெஸ்ட் போட்டிகளை விளையாடுகின்து. இது மிகவும் வெட்கக்கேடான விஷயமாகும். இந்த இரு அணிகளுக்கும் இடையே மட்டும் பெரிய வரலாறு உருவாகிறது. அதே சமயத்தில் இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வந்து விளையாட விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே என்பது ஒரு துளி கூட நியாயம் கிடையாது. நான் தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் குழுவில் இருந்திருந்தால் வேகமான மற்றும் பவுன்ஸ் செய்யக் கூடிய ஆடுகளத்தை நான் கேட்டு இருப்பேன். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடும் போட்டிகள் வெற்றி பெற விரும்புகிறது. தற்போது நிலைமைகள் அவர்களுக்கு சாதகமாக அமைகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் , கேஎல் ராகுல் (வி.கே), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா.