தொடரை வென்றது மட்டுமல்லாமல் இது வரை எந்த ஒரு அணியும் செய்யாத சாதனையை செய்த இந்திய அணி. அது என்ன சாதனை தெரியுமா??

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில்

By ·

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். ஜடேஜா 4 விக்கெட்டையும் இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர்.

இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் க்ராலி 60 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அவர்கள் இன்றைய நாளிலே 145 ரன்னில் அனைத்து விக்கெட் இழந்தனர் இதில் ரவிச்சந்திர அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

மீண்டும்நேற்றைய நாளிலே பேட்டிங் செய்வது இந்திய அணி 40 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இதுவரை எதுவும் இழக்காமல் நேற்று முடிந்தது. இன்று ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியின் பக்கம் போட்டி சென்றாலும் இந்திய அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி இந்தியாவில் நடந்த 17 தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

இதற்க்கு அடுத்த இடத்தில் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா அணி 10 போட்டிகளில் தொடர்ச்சியாக தொடரை வென்றுள்ளது. அது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு 150 ரன்களுக்கு இருந்த இலக்கை இந்திய அணி இன்று தான் வெற்றி பெற்றுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை