வாய்ப்பை நழுவ விட்ட சஞ்சு சாம்சன்..சொதப்பிய கேப்டன்சி – மோசமாக தோற்றுப்போன இந்தியா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வ

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா சுலபமான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது பாரபடாஸ் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனாக ஹேர்த்திக் பாண்டியா வர ரோஹித் ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் விளாச இஷான் கிஷான் அரை சதம் அடித்தார். ஆனால் அதே ஓவரிலேயே சுப்மன் கில் கேட்ச் கொடுத்து 34(49) ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷான் செப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அக்சர் படேல் 1(8) ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7(14) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளாத சஞ்சு சாம்சன் தேவையில்லாமல் கேட்ச் கொடுத்து 9(19) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் போது மழை பெய்த்தலும் பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்தியா விக்கெட்டுகளையும் இழந்து கொண்டே இருந்தது. ஜடேஜா 10(21) ரன்களிலும் சூரியகுமார் யாதவ் 24(25) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியில் இந்தியா 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்திடுந்தது.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் :

இதனையடுத்த இந்த சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 15(23) மற்றும் கையில் மேயர்ஸ் 36(28) என இருவரும் கொஞ்சம் தடுமாறி ஆட்டமிழந்தாலும், அதற்கு பிறகு வந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார், மேலும் இவருக்கு பக்கபலமாக விளையாடிய கேசி கார்டி 48(65) ரன்கள் எடுக்க ஷாய் ஹோப் 63(80) ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது 36.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும், ஏற்கனவே உலக கோப்பை குவாலிபயர் போட்டியில் தோல்வியை தழுவி முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தங்களுடைய பயணத்தை தொடங்கி உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை