“என்னையவா வெளிய உக்கார வச்சீங்க” IND vs WI முதல் டெஸ்ட் தொடக்கத்திலேயே தரமான சம்பவம் செய்த அஸ்வின்

இன்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும

By ·

இன்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். குறிப்பாக விராட் கோலி தலைமையினால இந்திய அணியில் இவர் எடுத்த விக்கெட்டுகள் பல. அதற்கு விராட் கோலி இவரை நம்பி பௌலிங் கொடுத்ததும் ஒரு காரணம்.

ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.இதனால் வெளிநாட்டு வீரர்களோடு இந்திய அணியின் பல சம்பவங்களும் இந்திய தேர்வாளர்களிடையும், கேப்டன் ரோஹித் ஷர்மாவையும் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக என்னவோ? இந்தியா இந்த இறுதி போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் அந்த தோல்வியில் இருந்து மீளவும் அடுத்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023- 25 சுழற்சியானது தொடங்கியுள்ளது.

இதில் முதல் போட்டியாக இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறுகிறது. இந்த இந்நிலையில் இன்று நடந்து வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த முடிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.

முதல் சாதனை :

ஏனென்றால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி மைத்தனமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் தான் வீசிய மூன்றவது ஓவரிலேயே சந்தர்பாலு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகன் மற்றும் தந்தை என இரண்டு பேரின் விக்கெட்டையும் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின். சந்தர்பாலு தந்தை தேஜ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை 2011 ஆம் ஆண்டில் வீழ்த்தியிருந்தார்.

இரண்டவது சாதனை :

மேலும் இதற்கு அடுத்த விக்கெட்டாக பிராத்வெயிட் விக்கெட்டையும் வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் 95 முறை ஸ்டெம்புகளை தாக்கி விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின். இப்படி கடந்த உலக கோப்பை சாம்பியன் ஷிப் போட்டியில் இடம்பெறா விட்டாலும் தான் யார் என்பதை இந்த போட்டியின் மூலம் மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்

அஸ்வின் இதுவரையில் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில் 92 டெஸ்ட் போட்டிகளில் 476 விக்கெட்டுகளையும், விளையாடிய 113 சர்வதேச 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், விளையாடிய 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

இதனால் ஐபிஎல் தவிர்ந்து எல்லா சர்வதேச போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகளையும் சேர்த்து 699 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்னமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படிக்க அஸ்வினுக்கு இன்னமும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை