இந்தியாவிற்கு எதிராக அதிரடி காட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் தொடராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றது. இந்த தொடரானது வரும் 2023 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான டேஸ்ட
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் தொடராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றது. இந்த தொடரானது வரும் 2023 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான டேஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பதினால் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற பக்கம் வந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக கடைசி நாளில் மழை வந்ததால் அந்த போட்டியானது டிராவல் முடிந்தது. இதனால் அந்த போட்டியானது டிராவில் முடிய 1 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் கோப்பையை வென்றது இந்தியா. மறுபுறம் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது வெஸ்ட் இண்டீஸ்.
இந்த போட்டி முடிந்த நிலையில் அடுத்த போட்டியானது வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் களமிறக்கும் சாய் ஹோப் தலைமையிலான தங்களுடைய அணியை வெஸ்ட் இண்டீஸ் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது தகுதி பெறாமல் வெளியேறியதால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் நட்சத்திர வீரர் சிம்ரன் ஹெட்மயரை 2 வருடம் கழித்து தேர்வு செய்துள்ளது. கடந்த 2017இல் அறிமுகமாகிய அவர் இதுவரை 47 ஒருநாள் போட்டிகளில் 1447 ரன்களை 35.29 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
மேலும் 5 சதங்களையும் அடித்துள்ளார். இருந்த போதும் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் தேர்வாகியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவற விட்டதால் கடைசி நேரத்தில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவை அதிரடியாக எதிர் கொள்வதற்காகவே அவர் 2 வருடங்கள் கழித்து தேர்வாகியுள்ளார். அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஓசினோ தாமஸ் நீண்ட நாட்கள் கழித்து தேர்வாகியுள்ளார்.
ஆனால் அதிரடி வீரரான நிக்கோலாஸ் பூரான், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் விளையாடுவதால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இருந்த போதிலும் அதிரடி காட்டும் பல வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்திருப்பதினால் இந்தியாவிற்கு இது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
West Indies name squad for CG United ODI Series powered by YES BANK
— Windies Cricket (@windiescricket) July 24, 2023
Full details here⬇️https://t.co/dlls8r9uZl pic.twitter.com/zGoHmgKACy
வெஸ்ட் இண்டீஸ் அணி :
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் போவல் (துணை கேப்டன்), அலிக் அதனேஷ், சிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், யானிக் கேரி, கேசி கார்ட்டி, டாமினிக் ட்ரேக்ஸ், பிரண்டன் கிங், ரொமானியா செபார்டு, கெவின் சின்க்ளைர், ஓசினோ தாமஸ், கெயில் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டேன் சீல்ஸ் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.