நமது கிராமத்து சிறுவர்களே இதை விட சிறப்பாக தயார் செய்வார்கள் – IND vs WI முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்.
இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில்
இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட வில்லை.
குறிப்பாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நவீன இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான்கள் பும்ரா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இதனிடையே தான் பும்ரா மீண்டும் இந்திய அணியில் இணைய வாய்ப்புகள் இருப்பதாகும் ஆசிய போட்டியில் அவர் விளையாட வைக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.
வைரல் புகைப்படம் :
இந்த நிலையில் தான் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, போட்டிக்காக பயன்படுத்தப்படும் ஆடுகளத்தின் காட்சிகள் சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலானது. ஆனால் அந்த பீட்சில் புல் இருப்பது போன்று இருப்பதாகவும் மேற்பரப்பு ஒரு சர்வதேச விளையாட்டின் தரத்திற்கு ஏற்றதாக இல்லை என்று கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். வைரல் படங்களின் அடிப்படையில் பார்த்தால், முதல் டெஸ்ட் போட்டிக்கு ஈரமான மேற்பரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
India Vs West Indies 1st Test pitch. pic.twitter.com/7AcDAY5OSZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 12, 2023
ஏற்கனவே சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் உலக கோப்பை சாம்பியன் ஷிப் 2023 இறுதி போட்டியில் இங்கிலாந்தின் பிட்ச் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணவே அவர்கள் சூழ்நிலையை தவறாக புரிந்து கொண்டு அணியில் சில மாற்றங்களை செய்த்தனர் அதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
Congratulations to Yashasvi Jaiswal and Ishan Kishan who are all set to make their Test debut for #TeamIndia.
— BCCI (@BCCI) July 12, 2023
Go well, lads!#WIvIND pic.twitter.com/h2lIvgU6Zp
இந்நிலையில் இன்று தொடங்கிய இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் புது வரவாக வந்துள்ளார். மேலும் அவருக்கு ரோஹித் ஷர்மாவே தன்னுடைய கைகளினால் கேப்பை அணிவித்து அணியில் இணைத்தார். மேலும் கே.எஸ் பரத்திற்கு மாற்றாக வந்த இஷான் கிஷானுக்கு விராட் கோலி கேப்பை வழங்கி கவுரவித்தார்.
இந்தியாவின் பிளெயின் 11 :
1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) இஷான் கிஷன், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) முகமது சிராஜ், 10) ஷர்துல் தாகூர், 11) ஜெய்தேவ் உனட்கட்.