என்னோட கேம் பார்க்க எங்க அப்பா வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. இதை செஞ்சி தான் அவரை வர வைத்தோம் – அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான்.

இந்திய அணி அடுத்த 3 டெஸ்ட் போட்டிக்காக அணியை அறிவித்துள்ளது. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்

By ·

இந்திய அணி அடுத்த 3 டெஸ்ட் போட்டிக்காக அணியை அறிவித்துள்ளது. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

மூன்றாவது போட்டியானது இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் இணைந்து இந்திய அணிக்கு சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்து இருந்தனர். அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்து வெளியேற அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கானுடன் இணைந்து ஜடேஜா ரன்களை குவித்து வந்தனர்.

எதிர்பாராத விதமாக சர்ப்ராஸ் கான் ரன் அவுட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை குவித்து இருந்தது. இத்தகைய ரன்களை குவிக்க இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் மற்றும் சர்ப்ராஸ் காணும் தான். தனது அறிமுகப்போட்டியிலே இந்திய அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற வாரலற்று சாதனையும் அவர் படைத்தார்.

இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 110 ரன்களும் குல்தீப் 1 ரன்னிலும் விக்கெட்டை இழக்காமல் இன்றைய நாளை நிறைவு செய்தனர்.

அறிமுகப்போட்டியில் சிறப்பாக செயல் பட்ட சர்ப்ராஸ் கான் கூறுகையில், பேட் செய்வதற்கான அவரது முறைக்காக காத்திருந்தேன். நான் கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேடை கட்டி தயாராக இருந்தேன். என் தந்தை முதலில் மைதானத்திற்கு வரவில்லை. ஆனால் சிலர் அவரிடம் கோரிக்கை வைத்தனர், மேலும் இந்தியாவுக்கான எனது முதல் டெஸ்ட் கேப்பைப் பெறும்போது இந்த சிறப்பு நிகழ்வைக் காண அவர் வந்தார். எனது வாழ்க்கையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடியது எனக்கு மிகவும் பெருமையானது. நான் ரவீந்திர ஜடேஜாவிடம் நிறைய பேசினேன். அவர் எனக்கு ஆதரவு அளித்தார்.சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தில் வித்தியாசமாக இருகின்றது என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை