யாருக்கு இன்று வெற்றி கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா – என்ன சொன்னார் தெரியுமா?

2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது. அதே சமயம், இரண்டாவது அணி எதுவென்ற போராட்டம் இன்னும் நடந்து வருகிறது. இந்த சீசனின் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக மாற, இன்று இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற

By ·

2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது. அதே சமயம், இரண்டாவது அணி எதுவென்ற போராட்டம் இன்னும் நடந்து வருகிறது. இந்த சீசனின் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக மாற, இன்று இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றியடைவார் என்று பிரபல ஐபிஎல் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கணித்துளார்.

அவர் கூறுகையில் “இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுக்குமே 50 – 50 சதவீதம் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்து முதல் இடத்தில் இருந்த அணி குஜராத் டைட்டன்ஸ் தான். இருந்த போதிலும் குஜராத் அணியால் மும்பை அணியை வீழ்த்துவது என்பது எளிதாக இருக்காது. அதேபோன்று இந்த தொடரின் துவக்கத்தில் தடுமாறினாலும் தற்போது சரியான நேரத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் மும்பை அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

மும்பை இந்தியன்ஸ் போன்ற சாம்பியன் அணியை வீழ்த்த வேண்டுமெனில் அதற்கு நீங்கள் உங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்தியாக வேண்டும். அந்தவகையில் இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தினை அளிக்கும். என்னைப்பொறுத்தவரை இந்தப்போட்டியில் இரு அணிகளுக்குமே 50% வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக தான் பார்ப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளதளார்.

அதற்கு தகுந்தாற் போலவே தற்போது போட்டி நடந்துவருகிறது. இன்று நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியானது மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர்.

3 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை மட்டுமே அடித்தனர். அதன் பின்னர் அதிரடியை காட்ட நினைத்த சாஹா 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த கில் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணியின் பௌலர்களை அடித்து விளாசி வந்தனர்.

10 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை குவித்தனர். கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் சில பவுண்டரிகளை பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 49 பந்துகளிலே தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணியின் பௌலர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்தனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை