அனுஜ் ராவட் அடித்த ரன்அவுட், வெற்றிக்கு அருகில் சென்ற பெங்களூரு அணி.வீடியோ உள்ளே.
இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பௌலிங்கை போட முடிவு செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணியின் கேப்டன்னுடன்
இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பௌலிங்கை போட முடிவு செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணியின் கேப்டன்னுடன், விராட் கோலியும் களமிறங்கினார். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய டுபிளிசிஸ் 16 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 22 ரன்களை எடுத்த நிலையில் மார்ஷிடம் விக்கெட்டை இழந்தார். அதற்கு பிறகு நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் விராட் கோலி.
33 பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில், அதற்கு பிறகே தனது விக்கெட்டை லலித்திடம் பறிகொடுத்தார். அதன் பின் விளையாட வந்த மேக்ஸ்வெல் ஆரம்பத்திலே அதிரடியை காட்டினார். லோம்ரோர் 26 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனாலும் மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்தார். யாரும் எதிர்பாரத நிலையில் வந்த ஹர்ஷல் பட்டேல் தனது கடைமைக்கு ஒரே ஒரு சிக்சரை அடித்து அக்சர் பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து வரிசையாக அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெலும் குல்தீபிடம் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து சென்ற நிலையில் அதன் பிறகும் வந்த தினேஷ் கார்த்திக்கும் ரன்களை எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். நன்றாக விளையாடி கொண்டு இருந்த பெங்களூரு தடுமாற்றத்தை சந்தித்தனர். இன்னிங்சை ஆரம்பித்த போது 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்தனர். இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இல்லாத காரனத்தால் பெங்களூரு அணி 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
175 ரன்களை எடுத்தல் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து அணிக்கு மீண்டும் ஏமற்றையே அளித்தார்.
இந்த நிலையில் தான் அனுஜ் ராவட் அடித்த ரன்அவுட் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா அடித்த பந்தை பாய்ந்து பிடித்து ஸ்டம்பில் அடித்தார்.அவருக்கு அந்த இடத்தில் இருந்து ஒரு ஸ்டெம்ப் மட்டுமே தெரியும் இருப்பினும் அவர் ஸ்டெம்பை நோக்கி அடித்தார்.
வீடியோ
Talk about creating an 𝙄𝙈𝙋𝘼𝘾𝙏!
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
Anuj Rawat gets the opposition impact player Prithvi Shaw out with a terrific direct-hit 🎯#TATAIPL | #RCBvDC pic.twitter.com/Nd8pNum9mo
அதன் பின்னும் வந்த மர்ஷும் ரன்களை எடுக்காமல் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அடுத்தடுத்து வந்த யாஷ் துள் விக்கெட்டை பறிகொடுத்து சென்றார். ஆரம்பத்திலேயே டெல்லி அணி பெரும் தடுமாற்றத்தை சந்திந்தது.டெல்லி அணி 3 ஓவர்களிலே 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.அணியின் நம்பிக்கையாக இருந்த டெல்லி அணியின் கேப்டனும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியிர பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அருகில் வந்தது.