ஒரே போட்டியில் உலகலெவல் பேமஸ் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகை ரியாக்சன்.
சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்ட சிஎஸ்கே ரசிகையின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20
சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்ட சிஎஸ்கே ரசிகையின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் பிரமாதமாக விளையாடி 201 ரன்களை எடுத்து சென்னை மண்ணில் CSKவை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த பல ரசிகர்களில் ஒரு ரசிகையின் வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாவனா துர்கம் என அடையாளம் காணப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 26ஆயிரம் பின்தொடர்பவர்களுக்கு மேலாக கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு மாடல், மேலும் இன்ஸ்டாகிராமில் இதுவரை 237 இடுகைகளை பதிவேற்றியுள்ளார் மற்றும் மீனாட்சி சவுத்ரி போன்ற பிரபலமான நபர்களால் இவரை பின்தொடர படுகிறார்.
இந்நிலையில் தான் இவர் மைத்த்னத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் அவற்றிற்கு பதிலளித்துள்ளார் பாவனா. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாவனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஒன்றின் மூலம் “உங்கள் அனைவரின் பாசத்திற்கும் மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மைதானத்திற்கு வந்த பிறகு பிரபலமானவர் இவர் மட்டும் கிடையாது.
கடந்த 2019 ஐபிஎல்லின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் தீபிகா கலந்து கொண்டார். அவர் சிவப்பு நிறத்தில் வந்திருந்ததால் கேமராமேனின் கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் தீபிகா இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5000-லிருந்து 3 லட்சமாக உயர்ந்ததால், ஒரே இரவில் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால் ஆர்சிபியின் ரசிகையாக மட்டுமே அடையாளம் காணப்பட்டதில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இவரை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் பார்வையாளராக தோன்றியதன் மூலம் மால்தி சாஹர் புகழ் பெற்றார். கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் அவரது ரியாக்சன் அதிகமாக ரசிகர்களால் கவரப்பட்டது. அந்த நேரத்தில் அவை மீம்களாக உருவாக்கப்பட்டதால் அவர் இந்தியா முழுவதும் அதிகம் பிரபலமானார். சமீபத்தில் இவருக்கு ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.