மழையால் சொதப்பிய சென்னை vs குஜராத் போட்டி, நாளை என்ன நடக்கும் – முழு விபரம் இதோ.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது. இதனா
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியானது தமதமாக தொடங்கும் என்ற அறிவிப்பே வழங்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து மழையானது பெய்ய தொடங்கியது. அதுவும் இடியுடன் கூடிய மழையாக இருந்தது. இருந்த போதிலும் 8.30 மணியவில் மழை நின்றது ஆனாலும் அதற்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கலாம் என்று வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மழை பெய்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேற தொடங்கினார்கள்.
அதற்கு பிறகும் மழை அதிகமாக பெய்ததின் காரணமாகவும், மைதானம் அதிக ஈரமாக இருப்பதினால் சென்னை vs குஜராத் போட்டியானது இன்று நிறுத்தப்பட்டது. மேலும் நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது நாளை(29/05/2023) இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெறும் என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதனை IPL ட்விட்டர் பக்கமே அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
The #Final of the #TATAIPL 2023 has been moved to the reserve day on 29th May – 7:30 PM IST at the Narendra Modi Stadium, Ahmedabad.
— IndianPremierLeague (@IPL) May 28, 2023
Physical tickets for today will be valid tomorrow. We request you to keep the tickets safe & intact. #CSKvGT pic.twitter.com/d3DrPVrIVD
மேலும் “ரிசர்வ் டே” என்ற புதிய ஐபிஎல் விதிமுறையினால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பைனல் குறித்த நாளை விடுத்து அடுத்த நாளில் நடக்கிறது. மேலும் நாளை இந்த போட்டி எப்போதும் போல 20 ஓவர்கள் நடைபெறுவதினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருவேளை இன்று போட்டி நடந்து சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் எம்.எஸ். தோனி கேப்டனாக சென்னை அணிக்காக தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிக முறை இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும் என்பதில் கண்டிப்பாக சந்தேகமே கிடையாது.