CSKவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது GT | தோனி செய்த சிறிய தவறினால் கைநழுவிய வெற்றி!
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்விக்கு ஒருவகையில் தோனியும் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது டாஸ் இழந்த சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. டுவைன் கான்வே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு மொயின் அலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் திரும்பினார். ஆனால் இவற்றுக்கிடையே ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான நின்று விளையாடினார். சொல்லப்போனால் குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
நிதானமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். அதனை தொடர்ந்து பெரிய ஷாட்களை ஆடிய அவர் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களின் உதவியுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தவிர, இறுதியில், எம்.எஸ். தோனி 7 பந்துகளில் 1 பவுண்டரி-1 சிக்ஸர் உதவியுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்களில் 178ரன்கள் எடுத்து.
குஜராத் டைட்டன்ஸ் :
இந்நிலையில் 179ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பமே அமர்க்களமாக விளையாடி ரன்களை குவித்தது. விருத்திமான் சாஹா 25 ரன்கள் எடுத்த நிலையில், கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரராக வந்த சாய் சுதர்ஷன் 22 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதன்பின், ஷுப்மன் கில் முன்னிலை வகித்து அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் வந்த ராஷித் கான் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து குஜராத் அணியை வெற்றியடைய செய்தார்.
Gujarat Titans beat Chennai Super Kings in the tournament opener | 📝 https://t.co/yVrzJP0ovp#ipl #ipl2023 #IPLT20 #GTvCSK #cricket #CricketTwitter pic.twitter.com/JvUFR7efpx
— CricketTimes.com (@CricketTimesHQ) March 31, 2023
தோனி செய்த தவறு :
இந்த முதல் போட்டியில் பெரிய தவறான கருதப்படுவது தோனி 8 வது நபராக களம் இறங்கியதுதான். ஏனென்றால் பெரிய பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த நேரத்தில் இவர் வந்திருந்தால் கண்டிப்பாக csk அணி 20-25 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கும், ஆனால் 8 வது இடத்தில் வந்த அவருக்கு அதிக பந்துகள் விளையாட கிடைக்க வில்லை. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ்ன் இந்த தோல்விக்கு தோனியும் ஒரு வகையில் காரணம் என்கின்றனர் நெட்டிசன்கள்.