CSK vs GT போட்டியில் மழை இப்படியே தொடர்ந்து பெய்தால் என்ன ஆகும் – விவரம் இதோ.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.
சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிக முறை இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும்.
இந்நிலையில் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்ந்தது. அதுவும் இடியுடன் கூடிய மழையாக இருந்தது. இருந்த போதிலும் 8.30 மணியவில் மழை நின்றது ஆனாலும் அதற்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கலாம் என்று வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மழை பெய்து வருகிறது.
Rain has stopped and covers coming off now at Narendra Modi Stadium Ahmedabad.pic.twitter.com/3CoAfKfmv6
— Vikram Rajput (@iVikramRajput) May 28, 2023
Rain has stopped at Narendra Modi Stadium, Ahmedabad 🏟️#IPLFinals #GTvCSK
— Supradeep Guha (@supradeepguha) May 28, 2023
Covers are coming off, toss to happen in a few moments. pic.twitter.com/l2ZgMcbCwu
இருந்த போதிலும் கிடைத்துள்ள தகவலின் படி மழை இன்னும் கொஞ்ச நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் 9.40 வரியில் தான் கெடு. 9.40 மணிக்கு மேலே சென்றால் போட்டியில் ஓவர்களாக குறைக்கப்படும். அது கடிப்பாக சென்னை அணிக்கு நல்லதே கிடையாது. ஆனால் 9.40 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் கண்டிப்பாக 20 ஓவர்கள் நடக்கும்.
மேலும் ஒருவேளை 9.40 மேலேயும் மழை பெய்தால் 11.56 மணிவரையில் கால அவகாசம் இருக்கிறது. ஆனால் அதற்கு பிறகு போட்டி நடந்தால் 5 ஓவர்களாக குறைக்கப்படும். அதனையும் விடுத்து போட்டி நடக்காத பட்சத்தில் நாளை போட்டி நடக்கும் என்பது தற்போது கிடைத்துள்ள தகவல்.