IPL2023 : பௌலர்களை கடுமையாக எச்சரித்தும் , ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியும் பேசிய தோனி வீடியோ உள்ளே.
ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்
ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
சென்னை அணியின் பேட்டிங்
சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நன்றாகவே அமைந்தது.சென்னை மைதானத்தில் முதல் முறையாக களம் கண்ட ருதுராஜ் அருமையான ஆட்டத்தின் மூலம் சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.அவர் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்தார் அவருடன் இணைந்து கான்வேவும் 29 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.அதன் பின் பேட்டிங் வந்த துபே 16 பந்துகளில் 27 ரன்களையும், மொயின் அலி 13 பந்துகளில் 19 ரன்களையும் ,பெண் ஸ்டோக்ஸ் 8 பந்துகளில் 8 ரன்களை மட்டும் அடித்தார்.
ராயுடு 27 ரன்களையும் ,ஜடேஜா 3 ரன்களிலும் வெளியேறினர். அதன் பின் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி வந்த முதல் பந்திலே சிக்ஸ்சரை தெறிக்க விட்டார்.அவர் 3 பந்துகளில் 12 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் .20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 217 ரன்களை குவித்தது . இவ்வாறு சென்னை அணியின் பேட்டிங் நன்றாகவே இருந்தன.
சென்னை அணியின் சொதப்பல் பௌலிங் :
என்னதான் சென்னை அணி நன்றாக இருந்தாலும் அவர்களது பௌலிங் சுமாராகத்தான் இருந்தது.சென்னை அணியின் பௌலிங்கை லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை சிதறவிட்டனர்.மேயிர்ஸ் 22 பந்துக்களில் 53 ரன்களை குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர். அதனால் போட்டியானது இறுதி ஓவர் வரைக்கும் போட்டியானது சென்றது .இருப்பினும் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
MS Dhoni in presentations is amazing!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
Talking about how bowlers need to control or need to play under different captain! 😂 pic.twitter.com/WEQCRxUWHP
பௌலிங்கை பற்றி தோனி கூறியது :
போட்டிக்கு பிறகு தோனி கூறியதில் இன்று நாங்கள் நன்றாக பேட்டிங் விளையாடி 217 குவித்தோம் .இருபினும் எங்கள் பந்து வீச்சி சிறப்பாக இல்லை, அதிக நோ பால் மற்றும் அகல பந்துகளை வீசினோம் . 3 நோ பால் ,13 அகலபந்து மற்றும் 2 லேக்பைஸ் ரன்களை கொடுத்துள்ளோம் .இது போன்று மேலும் நடந்தால் ”அவர்கள் புதிய கேப்டனுடன் விளையாட வேண்டியதாக இருக்கும்” என்றும் “இது நான் அவர்களுக்கு கொடுக்கும் 2 வது எச்சரிக்கை” என்றும் கூறியுள்ளார் .இது ரசிகர்களிடம் பெரத்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .