வீடியோ : மைதானத்தையே தன்னுடைய பந்துவீச்சால் அதிர்ச்சியடைய செய்த ஜடேஜா.
ஐபிஎல் 2023 க்கான லீக் 45 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹார் சென்னை அணியில் இணைந்தார். லக்னோ அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டியில்இருந்து விலகியதால்
ஐபிஎல் 2023 க்கான லீக் 45 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹார் சென்னை அணியில் இணைந்தார். லக்னோ அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டியில்இருந்து விலகியதால் க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல் பட்டு வந்தார்.
இந்நிலையில் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது.அதன் படி களம் கண்ட தொடக்க வீரர்களான மேயர்ஸ் மற்றும் வோஹ்ரா ஆரம்பம் முதலே நிதனமான தொடக்கத்தையே கொடுத்தனர். மொயின் அலி வீசிய ஓவரில் மேயர்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதற்கு பிறகு வந்த லக்னோ அணியின் வீரர்கள் வந்த வேகத்திலே சென்றனர். தீக்ஷனா வீசிய ஓவரில் வோஹ்ரா 10 ரன்களிலும் மற்றும் க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்கள். இந்நிலையில் 7வது ஓவரை ஆல்ரவுண்டர் ஜடேஜா வீச வந்தார். அவர் வீசிய ஓவரில் ஐந்தாவது பந்தில் ஜடேஜா சரியான ஒரு சுழல்பந்தை வீசினர். அந்த பந்து லெக் சைடில் பிட்ச் ஆகி ஸ்டோனிஸ் பேட்டை கடந்து நேரடியாக ஸ்டம்ஸை தாக்கியது.
𝗣.𝗘.𝗔.𝗖.𝗛!
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
That was an epic delivery from @imjadeja 🔥🔥
Follow the match ▶️ https://t.co/QwaagO40CB #TATAIPL | #LSGvCSK pic.twitter.com/dhPSVB4BuF
அது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. ஸ்டோனிஸ் என்ன நடந்தது என்று தெரியாமல் நின்றார். இந்த மூலம் இந்தியாவில் ஏன் ஜடேஜா முன்னணி ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டோனிஸ் ஆட்டமிழந்த பிறகு சொல்லும்படியாக எந்த பேட்ஸ்மேனும் சையாக ஆடவில்லை.
ஏனென்றால் 9வது ஓவரில் கரண் ஷர்மா மெயின் அலி பந்தில் ஆட்டமிழக்க 44 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து 15 ஓவர்கள் வரையில் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வரும் நிலையில் பத்தொனி மிகவும் சிறப்பான ஆடி ஒரு ஓவரில் 14 ரன்களை அடித்தார். இந்த செய்தியை எழுதும் வரையில் 17 ஓவர்கள் முடிவில் 98 ரன்களை எடுத்துள்ளது லக்னோ.