பந்துகளை பறக்கவிட்ட கான்வே, களமிறங்காத ரஹானே, களமிறங்கிய தோனி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் மீம்ஸ்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணி புள்ளி பட்ட

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திலும் பஞ்சாப் அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது.

சென்னை அணியின் தொடக்க அட்ட காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே அதிரடியை தொடங்கினார்.தொடர்ந்து அதிரடியாகவே விளையாடி வந்த ருதுராஜ் மற்றும் கான்வே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். இருவரும் இனைந்து 5.3 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிபை பூர்த்தி செய்தனர். அதன் பின் ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, அதற்க்கு பின் வந்த டுபே ஆரம்பம் முதலே அவருடைய பாணியில் அதிரடியை காட்டிவந்தார்.

மற்றொரு புறம் அதிரடியாக விளையாடி வந்த கான்வே 30 பந்துகளில் தன்னுடைய மற்றொரு அரை சத்தத்தை பூர்த்தி செய்தார். டுபே 17 பந்துகளில் 28 ரன்களை அடித்த நிலையில் ஷாருக்கானிடம் கேட்ச் குடுத்து வெளியேறினார். அதன் பின் களம் கலந்த மொயின் அலியுடன் இணைந்த கான்வே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நான்கு பக்கங்களிலும் அடித்து சிதறடிக்க பஞ்சாப் அணியின் பௌலர்களுக்கு என செய்வதென தெரியாமல் திணறியே வந்தார்.

மொயின் அலி ரன்களில் அவுட்டாகி வெளியேற, அதற்க்கு பின் வந்த ஜடேஜா அதிரடியை காட்டி வந்தார். அதன் பின் ஜடேஜா அவுட்டாகி வெளியேற அதிரங்கமே அதிர வைக்கும் வகையில் தோனி களமிறங்கி 2 சிக்சர்களை பறக்க விட்டார். 20 வது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்தது சென்னை அணி. கான்வே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை சென்னை அணியின் தொடக்க வீரர்கள் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமலலாமல் கான்வே இந்த சீசனில் 5வது அரை சதத்தை எடுத்துள்ளார். சிறப்பான ஆட்டத்தையும் காட்டி வருகிறார். இந்த போட்டியில் இன்னமும் சில பந்துகளில் கிடைத்திருந்தால் கண்டிப்பாக சதம் நடித்திருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்நிலையில் தான் அவரை பற்றியும் குஜராத் அணியை பற்றியும் ஒரு ட்விட்டர் பக்கங்களில் மீம்ஸ் பரவி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை