CSK vs RR ஐபிஎல் கேப்டனாக தோனியின் 200வது ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை? – கணிப்பு இதோ.

ஐபிஎல் 2023 இன் 17வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மைதானமான சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றனர். இதில் 15 முறை சிஎஸ்

By ·

ஐபிஎல் 2023 இன் 17வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மைதானமான சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றனர். இதில் 15 முறை சிஎஸ்கே அணியும் 11 முறை ராஜஸ்தான் ராயல் அணியும் வெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டியில் இதுவரையில் இதுவரை இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்றுள்ளன. புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது, CSK ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் நடந்த மும்பை vs சென்னை போட்டியில் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 18.1 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்கடித்தது.

பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஜிங்க்யா ரஹானே சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் RR இன் பேட்டர்கள் மற்றொரு பேட்டிங் மாஸ்டர் கிளாஸை வழங்கினர். முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ஆர்ஆர் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தலா அரைசதம் அடித்தனர்.

டிரென்ட் போல்ட் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் உட்பட மொத்தம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் நான்கு ஓவர்களில் 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார். யுஸ்வேந்திர சாஹல் நான்கு ஓவர்களில் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளுடன் தனது கனவு ஓட்டத்தைத் தொடர்ந்தார். 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்ததற்காக ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 20 ஓவர்களில் DC 142 ரன்கள் எடுக்க RR 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கணிப்பு :

இந்நிலையில் இரண்டு அணிகளுமே நல்ல லைன் அப்புடன் வலிமை வாய்ந்த அணியாக இருக்கிறது. இருந்த போதிலும் சென்னை தன்னுடைய சொந்த மைத்தானத்தில் ஆடுவதினால் சென்னைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்னினும் சிஎஸ்கே அணியில் பேன் ஸ்டோக்ஸ், தீபக் சாகர், மெயின் அலி போன்றவர்கள் காயமடைந்ததினாலும் ராஜஸ்தானிடம் நல்ல பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பதினால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றிபெற 100/ 60 சதவிகிதம் இருக்கிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை