விசில் பறக்கும் சேப்பாக் மைதானம் – ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய சென்னை.

ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோ

By ·

ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி சன்ரைசஸ் அணியின் தொடக்க அட்டகரர்களான ப்ரூக் மற்றும் அபிஷேக் களமிறங்கினார்கள்.

சென்னை அணியின் பௌலிங்கை சமாளித்து நிதானமாகவே விளையாடி ரன்களை சேர்த்தனர். ப்ரூக் ரன்களை உயர்த்தும் முயற்ச்சியில் ஆகாஷ் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்த நிலையில் தான் ஜடேஜா வீசிய பந்தில் அபிஷேக் 34 ரன்களிலே வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த நிலையிலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சை விளையாட முடியாமல் திணறி வந்தனர்.

ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 ஓவர்களில் சுழலில் சிக்கி த்ரிப்பாதி, மயாங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தனர். அணியின் கேப்டன் மார்க்ரம் ஜொலிப்பர் என எதிர் பார்த்த நிலையில் தீக்ஷானா விடம் 12 ரன்களிலே வெளியேறினார். அற்புதமாக பந்து வீசிய சென்னை ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடந்த போட்டிகளில் சென்னை அணிக்கு பௌலிங் சரியாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் அதை இந்த போட்டியில் அது சிறப்பாக அமைந்தது.

சன்ரைசஸ் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தன. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் கடந்த போட்டிகளை பார்க்கும் போது சென்னை அணியின் பந்துவீச்சு அதிகம் முன்னேறி உள்ளது நன்டர்கவே தெரிகிறது. அதே போல கடந்த போட்டிகளை போல இல்லாமல் பிலேடிங் மிகவும் சிறப்பாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கும் சென்னை அணியில் பேட்ஸ்மேன்கள் களமிறங்க இருக்கின்றனர். ஒருவேலை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 4 வென்றியை எட்டுவதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதோடு இந்த போட்டியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் பார்த்து வருகிறார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை