டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ.
ஐபிஎல் 2023 போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின அவற்றில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இதில் கொல்கத்தா
ஐபிஎல் 2023 போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின அவற்றில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது, இந்நிலையில் மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே லக்னோவில் நடைபெற்றது.
இந்நிலையில் டெல்லி அணியின் விருப்பமான கேப்டனாக இருந்து வந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை. அவர் கடந்த ஆண்டு பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இப்படியொரு நிலையி தான் அவருக்குப் பதிலாக, அணியின் தலைமை மூத்த வீரர் டேவிட் வார்னரின் கைகளில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்க பட்டுள்ளது.
இந்நிலையில் தொடக்கத்திலேயே டெல்லி டாஸ் வென்ற நிலையில் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால் டேவிட் வார்னர் யோசித்த படி போட்டியானது செல்லவில்லை. தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தணடுமாறினாலும் கைல் மியர்ஸ் நிதானமாக நின்று சதம் அடித்து ரன்களை குவிக்க தொடங்கினர். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது.
இந்நிலையில் 193 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறது. தற்போது வரையில் 7.4 ஓவர்கள் முடிவில் 3 விகெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்திருக்கிறது டெல்லி. இந்த நிலையில் தான் டெல்லி நிர்வாகம் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு செயலைச் செய்துள்ளது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Jersey of Rishabh Pant in Delhi dugout.
— Johns. (@CricCrazyJohns) April 1, 2023
A great gesture. 👏 pic.twitter.com/yzwwsxup8i
அதாவது டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக, அணியின் தலைமை மூத்த வீரர் டேவிட் வார்னரின் கைகளில் உள்ள நிலையில் தான் இந்த போட்டியில் டெல்லி நிர்வாகம் ரிஷப் பந்தின் ஜெர்சியை டிரஸ்ஸிங் ரூமில் தொங்கவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த நடவடிக்கையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.