அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக வருவார் – வெற்றிக்கு பிறகு அணி வீரர்களை பாராட்டிய ஹர்திக் பாண்டியா.

ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி விட்டது. அதில் நேற்று மிகவும் பரபரப்பான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபார சதத்தால் 233 ரன்கள் குவ

By ·

ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி விட்டது. அதில் நேற்று மிகவும் பரபரப்பான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபார சதத்தால் 233 ரன்கள் குவித்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.

இஷானின் காயத்திற்குப் பிறகு விளையாட வந்த நேஹல் வதேராவும் பொறுமையாக விளையாடினார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ், மும்பை அணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவர் ஆட்டமிழந்த நிலையில் மும்பை அணி அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியா தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு முடியமா காரணமாக கருதப்படுபவர் சுப்மன் கில். இவர் இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். மேலும் இந்த சீசனில் கடந்த போட்டி வரையில் 16 போட்டிகள் விளையாடி 60.79 சராசரியுடன் 156.43 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 851 ரன்களை விளாசியிருக்கிறார். மேலும் 4 அரை சதங்களையும் 3 சதங்களையும் அடித்துள்ளார் சுப்மன் கில்.

இப்படிபட்ட நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுப்மன் கில் குறித்தும், அணி வீரர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் “எங்களுடைய அணியின் வீரர்கள் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். அதன் பலன் தான் இன்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

தன்னம்பிக்கையுடனும் சிறப்பாகவும் செயல்பட்டார்கள். சுப்மன் கில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும் எந்த வித பதர்ட்டமும் இல்லமல் பொறுமையாக ஆடினார். அவர் பந்துகளை யாரோ ஒருவர் வீசுவதை போல நாலாபுறமும் சிதறடித்தார். அவர் கண்டிப்பாக ஐபிஎல் போட்டியிலும் சர்வதேச போட்டிகளிலும் ஒரு சூப்பர் ஸ்டாராக வளம் வருவார்.

நான் அவருடன் அதிகம் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கையை கொடுக்க முயற்சி செய்கிறேன். அனைவரும் அணியின் பொறுப்பை ஏற்று விளையாடுகின்றனர். அதிலும் அணி இக்கட்டான துள்நிலையில் இருக்கும் போது நான் அதிகம் நம்புவது ரஷீத் கானைத்தான். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம் என்று நம்புகிறேன். இறுதிப்போட்டியில் போட்டியில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறோம் என்றார் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை