குஜராத் அணியை காப்பாற்றிய சுப்மன் கில், சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய பஞ்சாப் கிங்ஸ்.
ஐபிஎல் 2023 தொடரில் தற்போது பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு செய்தார். இந்நிலையில் பஞ்சாபின் இன்னிங்ஸின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்ததால் விக்கெட்டுகளின் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்த
ஐபிஎல் 2023 தொடரில் தற்போது பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு செய்தார். இந்நிலையில் பஞ்சாபின் இன்னிங்ஸின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்ததால் விக்கெட்டுகளின் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது.அப்படிப்பட்ட நிலையில் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சாம் கரன் மீது அணி அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இன்றைய பஞ்சாப் அணியின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் மலிவாக அவுட்டானார். அதற்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது இடத்தில், மேத்யூ ஷார்ட் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினார், ஆனால் அவரும் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்கு பிறகு பந்த பானுகா ராஜபக்சே மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. இதன் பின்னர் சாம் கரன் களம் இறங்கியதும் பஞ்சாப் அணிக்கு வேகமாக ரன்கள் வரும் என்று எதிர்பாக்கப்பட்டது.ஆனால் சாம் கரனும் குறைவான பந்துகளில் ரன்கள் எடுக்க ஒரு கட்டத்தில் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
அப்போது குஜராத் அணியின் பிரபல சூழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் வீசிய பந்தில் சாம் கரன் மகேந்திர சிங் தோனியை போல சிக்ஸர் அடித்து விளாசினார். அதனை பார்த்த ரஷீத் கானுக்கு அதிற்சியாக இருந்தது. ஆனால் சாம் கரனும் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மோஹித் சர்மாவிடம் அவுட்டானார். இந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் அடுத்து ஆடிய குஜராத் அணி தொடக்கத்திலேயயே பிரமாதமாக ஆடி ரன்கள் அடித்தனர். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் சாஹா முதல் ஓவரில் இருந்து பொறுமையாகவே ஆடி வந்தனர். நிதானமாக விளையாடி வந்த சாஹா 19 பந்துகளில் 30 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த தமிழகத்தின் சாய் சுதர்சன்க்கு சரியான தொடக்கம் இருந்தாலும் அதை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இக்கட்டான சூழ்நிலையில் சாம் கரண் வீசிய பந்தில் கில் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்படிப்பட்ட நிலையில் கடைசி இப்போட்டி எந்த அணிக்கு வெற்றி என்று கணிக்க முடியாத அளவிலே இருந்தது. ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் திவாதியா அடித்த 4 மூலம் குஜராத் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.