திரில்லிங் கடைசி ஓவர். அதிரடியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிய லக்னோ.

ஐபிஎல் 2023 தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி வென்றால் மூன்றாவது அணியாக ப்ளே ஆப்பிற்கு தகுதி பெரும். கொல்கத்தா அணி ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற வாய

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி வென்றால் மூன்றாவது அணியாக ப்ளே ஆப்பிற்கு தகுதி பெரும். கொல்கத்தா அணி ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற வாய்ப்பு குறைந்த அளவே உள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா பௌலிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி வந்தனர். கரண் ஷர்மா 3 ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ப்ரேரக் மன்கட் நிதானமாகவே விளையாடி வந்த நிலையில் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ஸ்டானிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்துவார் என எதிர் பார்த்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் வந்த க்ருனால் பாண்டியா 9 ரன் இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 28 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி திணறி வந்தது. பதோனி 25 ரன்களிலும் வெளியேற, மற்றொரு புறம் பூரான் அதிரடியாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் அவரும் 58 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் திணறி வர 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது லக்னோ அணி.

இந்நிலையில் 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்குகிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் பிரமாதமான இருந்த நிலையில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பிய வெங்கடேஷ் ஐயர் வடிவில் முதல் அடி வந்தது. இதன்பிறகு நிதிஷ் ராணா 8 ரன்களிலும், குர்பாஜ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜேசன் ராய் இன்னிங்ஸைக் கையாண்டார், ஆனால் அவர் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ரிங்கு சிங் தனி ஆளாக போராடினார். இதன் போது கடைசி ஓவரில் வெற்றி 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிரடியாக ஆடிய ரிங்கு கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இருந்த போதிலும் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் 2023 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை