20வது ஓவரை ஸ்பின்னரிடம் கொடுத்த காரணம் இதுதான் – கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா.
ஐபிஎல் 2023 க்கான லீக்கில் 47 போட்டி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் எதிர் கொண்டன. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிற
ஐபிஎல் 2023 க்கான லீக்கில் 47 போட்டி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் எதிர் கொண்டன. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் தடுமாற்றத்தையே சந்தித்து வந்தனர்.
ஓவரே ஓவரில் குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்திலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். ராய் 20 ரன்களில் தியாகி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் நிதிஷ் ரானா 42 ரன்களில் வெளியேற. நிதானமாக விளையாடி வந்த ரின்கு சிங் அணிக்கு ரன்களை குவித்து வந்த நிலையில் 46 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த யாரும் ரன்களை அடிக்க திணறி வந்த நிலையில் 20 வது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி
இலக்கை துரத்திய ஐதராபாத் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து மயங்க் அகர்வாலும் 18 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது இடத்தில் இருந்த ராகுல் திரிபாதி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். மெதுவாக பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் ஒரு முனையில் விக்கெட்டை இழக்கவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக்கும் டக் அவுட்டாக, இதையடுத்து கேப்டன் மார்க்ரம் 41 ரன்களில் இன்னிங்சில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்தவர்கள் சில ஷாட்டுகளை அடித்தாலும் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடும் வீரர்கள் இல்லாத நிலையில் கடைசி ஓவரில் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீசினால் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தினார். இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய நிதிஷ் ராணா வருண் சக்கரவர்த்தியை பாராட்டி பேசினார்.
ராணா பேட்டி :
அவர் கூறுகையில் “போட்டியின் நடுவில் சில ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். இதனால் போட்டி இடையில் மானாலும் ஷர்துல் மற்றும் வைபவ் ஆகியோருடன் விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன் மீண்டும் போட்டிக்குள் வந்தோம். அப்படித்தான் இந்த விளையாட்டில் நாங்கள் மீண்டு வந்தோம். ஏனென்றால் அவர்கள் கடைசி வரை பேட்டிங் செய்தால் நிச்சயமாக இந்த போட்டி எங்களின் கைகளை மீறி சென்றிருக்கும்.
அதே போல கடைசி ஓவரில் நான் சுழற்பந்து வீச்சாளர் வைத்து வீசுவைதா? அல்லது வேகப்பந்து வீச்சாளரை வைத்து வீசுவதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் எங்களுடைய சூழல் பந்து வீச்சாளர்கள் மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தியை அழைத்து கடைசி ஓவரை வீச சென்னேன் என்று கூறினார் நிதிஷ் ராணா.