மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் வெற்றி யாருக்கு? – கணிப்பு இதோ.
ஐபிஎல் 2023 தொடரின் 35வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றனர். இந்த சீசனில் மும்பைக்கு மோசமான தொடக்கம் இருந்த போதிலும் தொடர் 3 வ
ஐபிஎல் 2023 தொடரின் 35வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றனர். இந்த சீசனில் மும்பைக்கு மோசமான தொடக்கம் இருந்த போதிலும் தொடர் 3 வெற்றிகளை பதிவு செய்தது ஆனாலும் அதற்கு கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர மும்பை அணி மிகவும் குறியாக இருக்கிறது.குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஜோடியாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்க உள்ளனர். ரோஹித் சர்மா கடைசி இரண்டு போட்டிகளிலும் வேகமாக ரன் குவித்தார். ஒரு நல்ல தொடக்கத்திற்குப் பிறகு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் அவரது வேகமான ஆரம்பம் அணிக்கு மிகவும் முக்கியமானது என்பதை அப்போது உணர்த்தியது.
ரோஹித்தின் ஜோடியாக கடந்த போட்டியில் வந்து ஆட்டமிழந்த இஷான் கிஷன் மீண்டும் தனது ஃபார்மை தக்கவைத்துக் கொள்வதை பார்க்கப் முயற்சிக்கிறார். இதுவரை இஷான் மும்பை அணிக்காக அரை சதம் அடித்துள்ளார். ஆனாலும் அவரிடம் இது இன்னம் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதே போல கேமரூன் கிரீனை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு அனுப்பி பெரிய இன்னிங்ஸ் விளையாட வைக்கலாம்.
கடந்த போட்டியில் சூர்யா அற்புதமாக பேட்டிங் செய்தார் ஆனால் அதற்கு பிறகு ஆட்டமிழந்தார். டீம் டேவிட் முந்தைய போட்டியைப் போலவே அற்புதமாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியை பார்க்கையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டு ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் சீசனை நன்றாகத் தொடங்கியுள்ளது.
தங்கள் கடைசிப் போட்டியில் டைட்டன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் நல்ல பேட்டிங் வரிசைக்கு எதிராக வெறும் 135 ரன்களை மட்டுமே வைத்து முறியடித்தது. விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கில் பயங்கர ஃபார்மில் உள்ளனர் அதே நேரத்தில் மோஹித் ஷர்மா பந்துவீச்சில் அனைவரையும் கவர்ந்துள்ளார். இளம் ஆப்கானிஸ் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதும் இதுவரை உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கணிப்பு :
குஜராத் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது அதே நேரத்தில் எனவே அந்த போட்டியிலும் அதே நம்பிக்கையுடன் களமிறங்கும் குஜராத் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள நிலைக்கும். மறுபுறம் பஞ்சாப் அணியுடனான கடைசி தோல்விக்கு பிறகு வெற்றியை தேடி மும்பை இந்தியன்ஸ் அணியின் வருகிறது. எனவே இரு அணிகளும் பலமாக இருந்தாலும் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பதினாலும், பந்துவீச்சில் குஜராத் சிறப்பாக செயல்பட்டதினாலும் வெற்றி குஜராத் அணிக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.