அணியின் கூட்டு முயற்சியால் சென்னை மைத்தனத்தில் தரமான ஸ்கோர் அடித்த மும்பை – இந்த போட்டியில் லக்னோவை வெல்லுமா?

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அதில் இன்று எலிமினேட்டர் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியை குஜராத் அணியுடன் மோத உள்ளன. இப்போட்டியி

By ·

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அதில் இன்று எலிமினேட்டர் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியை குஜராத் அணியுடன் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த கீரின் பவுண்டரிகளை அடித்து வந்த நிலையில் இஷான் கிஷன் 15 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

கீரின் உடன் இணைந்த சூர்ய குமார் யாதவ் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து வந்தனர். 9 வது ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை குவித்து இருந்தது. சூர்ய குமார் யாதவ் 33 ரன்களிலும் இஷான் கிஷன் 41 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வந்தனர். 16 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்களை இழந்த நிலையில் 141 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர்.

அப்படிப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடும் டிம் டேவிட் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற திலக் வர்மா 26 ரன்களில் வெளியேற மும்பை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். மேலும் அதற்கு பிறகு ஜோர்டன் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, இம்பாக்ட் வீரராக வந்த வதேரா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை சேர்த்தார். 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் 182 இழப்பிற்கு ரன்களை குவித்தது.

இந்நிலையில் மும்பை அடித்துள்ள இந்த ஸ்கோர் நேற்று சென்னை அடித்த ரன்களை விட அதிகம். சென்னை நேற்று தந்த போட்டியில் திறமையாக விளையாடி குஜராத்தை வென்றது. அதே போன்று தற்போது நடந்துவரும் மும்பை vs லக்னோ போட்டியிலும் லக்னோவை மும்பை அணி வெல்லும் பட்சத்தில் வரும் 36ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொள்ளும். அப்படி அங்கே வெற்றி பெற்றால் மும்பை அணி ஐபிஎல் 2023 பைனலில் சென்னை அணியை எதிர்கொள்ளம்.

அந்த போட்டி கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இருந்த போதிலும் அவை இவை அனைத்தும் நடக்க மும்பை அணி இந்த போட்டியுள்ளாமல் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை