லக்னோவை வீழ்த்தி அற்புதமான வெற்றியை பதிவு செய்த மும்பை – குஜராத்தை வீழ்த்தி சென்னையுடன் மோதுமா?
ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அதில் இன்று எலிமினேட்டர் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியை குஜராத் அணியுடன் மோத உள்ளன. இப்போட்டியி
ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அதில் இன்று எலிமினேட்டர் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியை குஜராத் அணியுடன் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்கு பிறகு வந்த கீரின் பவுண்டரிகளை அடித்து வந்த நிலையில் இஷான் கிஷன் 15 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினர். கீரின் உடன் இணைந்த சூர்ய குமார் யாதவ் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து வந்தனர்.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மா 26 ரன்களில் வெளியேற மும்பை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் ஜோர்டன் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, வதேரா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் 182 இழப்பிற்கு ரன்களை குவித்தது.
லக்னோ பேட்டிங் :
இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் ப்ரெரக் மன்கட் ஆரம்பத்திலேயே 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க இம்பேக்ட் வீரராக விளையாடிய கெய்ல் மேயர்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரியுடன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதானத்துடன் விளையாட வேண்டிய கேப்டன் க்ருனால் பாண்டியா 8 ரன்னில் அவுட்டானார்.
இப்படி ஒருபுறம் விக்கெட்டுகள் விள மறுபுறம் 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்டு 40 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்த ஸ்டோனிஸ் அவசரப்பட்டு ரோகித் சர்மாவிடம் ரன் அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 16.3 ஓவரிலேயே 101 ரன்களுக்கு லக்னோவை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மெத்வால். அவர் 3.3 ஓவர்களில் 5 மட்டுமே கொடுத்து ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார்